கருடம்புதூரில் கைப்பேசி கோபுரம் அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

திருப்பூர் : சமுதாயக் கூடம் கட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும், கைப்பேசி கோபுரம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரியும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கருடம்புதூர் பகுதி மக்கள் முற்றுகையிட்டனர்.

திருப்பூர் : சமுதாயக் கூடம் கட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும், கைப்பேசி கோபுரம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரியும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கருடம்புதூர் பகுதி மக்கள் முற்றுகையிட்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கருடம்புதூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், குடியிருப்பு பகுதி நடுவிலேயே கைப்பேசி கோபுரம் அமைக்கும் நடவடிக்கையில் தனியார் நிறுவனம் ஈடுபட்டு வருவதாகவும், இதனால், கைப்பேசி கோபுரத்தின் ஒயர்கள் குடியிருப்பு பகுதி மற்றும் பள்ளியின் மேற்கூரை வழியாக செல்வதால் உயிர் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.



ஏற்கனவே, இப்பகுதியில் இரண்டு கைப்பேசி கோபுரம் உள்ள நிலையில், மீண்டும் ஒரு கோபுரம் அமைக்கும் முயற்சியில் ஈடுபடும் தனியார் நிறுவனத்தைக் கண்டித்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் மனு அளித்தனர். 

மேலும், 150 குடும்பங்களுக்கு மேல் தாழ்த்தப்பட்ட மக்கள், 70 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் பகுதியில், சமுதாயக் கூடம் அமைத்து தரக்கோரி, பல மாதங்களாக மனு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அப்பகுதியில் உள்ள ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் சமுதாயக் கூடத்தை கட்டவிடாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதைக் கண்டிப்பதாகவும், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் தெரிவித்தனர். 



இதனிடையே, இப்பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...