தி.மு.க., கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு

சென்னை : நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., தலைமையிலான கூட்டணியுடன் இணைந்து போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை : நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., தலைமையிலான கூட்டணியுடன் இணைந்து போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக தி.மு.க., தலைமைக் கழகம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- நடைபெற உள்ள 17-வது நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும். கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரனும் இன்று தொகுதி உடன்பாடு குறித்து கலந்து பேசினர். அதில், ஒரு தொகுதியை கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பங்கிட்டுக் கொள்வதெனவும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது, என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையின்போது தி.மு.க., பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர் பாலு, துணை பொதுச் செயலாளர் இ.பெரியசாமி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் உடனிருந்தனர். 

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசியதாவது :- தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி இடம் பெறுவது என இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு எட்டப்பட்டுள்ளது. ஒரு தொகுதி என தீர்மானிக்கப்பட்டு, உடன்படிக்கையில் கையெழுத்திட்டிருக்கிறோம். எங்கள் கட்சி போட்டியிடுகின்ற தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலே போட்டியிடுவது என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. கூட்டணியை வெற்றி பெறச் செய்ய தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் எங்கள் கட்சி பணியாற்றும், என்றார். 

ஏற்கனவே, தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரியுடன் சேர்த்து 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...