கோவையில் வணிகரீதியாக ஓட்டி வந்த பைக் டாக்சிகள் மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைப்பு

கோவை : கோவையில் விதியை மீறி இருசக்கர வாகனத்தை வணிகரீதியாக ஓட்டி வந்த பைக் டாக்சிகளை, தனியார் கால் டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் பிடித்து மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.


கோவை : கோவையில் விதியை மீறி இருசக்கர வாகனத்தை வணிகரீதியாக ஓட்டி வந்த பைக் டாக்சிகளை, தனியார் கால் டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் பிடித்து மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

ரேப்பிட்டோ பைக் டாக்ஸி நிறுவனமானது கோவை காந்திபுரம் அருகே உள்ளது. இந்த பைக் டாக்ஸியை பொதுமக்கள் செயலி மூலம் புக் செய்து தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்கின்றனர். இந்த நிறுவனமானது, கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக கோவையில் செயல்பட்டு வருகிறது. இந்த பைக் டாக்ஸி முறைக்கு கோவையில் தொடக்கத்திலிருந்தே ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் மத்தியில் எதிர்ப்புகள் இருந்து வருகிறது. மேலும், மிகவும் குறைந்த விலையில் பயணிகளை ஏற்றிச் செல்வதால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆட்டோ மற்றும் கால் டாக்சி ஓட்டுநர்கள் குற்றம் சுமத்தி வந்தனர். 



தமிழகத்தில் பைக் டாக்ஸி முறையை செயல்படுத்த எந்த விதிமுறைகளும் வரவில்லை. ஆனால், இந்த பைக் டாக்ஸி நிறுவனத்தினர், போக்குவரத்து விதிகளை மீறி பாதுகாப்பில்லாத பயணத்தை பொதுமக்களுக்கு தருவதாக கூறப்படுகிறது. மேலும், சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்தும் பதிவுகள் கொண்ட இருசக்கர வாகனங்களை வணிகரீதியாக விதியை மீறி பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 



இந்த நிலையில், இன்று காலை பைக் டாக்ஸி செயலி மூலம் இருசக்கர வாகனத்தை புக் செய்து விதியை மீறி வாகனத்தை ஓட்டிய இருசக்கர வாகனங்களை மடக்கி பிடித்த கால் டாக்ஸி ஓட்டுநர்கள், அவற்றை கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதனால், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. 



இதனிடையே, விதிகளை மீறி செயல்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும், வாகனங்கள் மீதும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...