முதுமலை வனப்பகுதிக்குள் கட்டுக்குள் வந்த காட்டுத் தீ : தொடர் கண்காணிப்பில் வனத்துறை

நீலகிரி : முதுமலை வனப்பகுதிக்குள் பரவிய காட்டுத் தீ கட்டுக்குள் வந்ததையடுத்து, தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாயென வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி : முதுமலை வனப்பகுதிக்குள் பரவிய காட்டுத் தீ கட்டுக்குள் வந்ததையடுத்து, தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாயென வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளில் கடந்த 3 நாட்களாக காட்டுத் தீ எரிந்து வந்தது. இந்நிலையில், இந்த தீ நேற்றிரவு முதல் கட்டுக்குள் வந்துள்ளது. தற்போது, வனத்துறையினரால் வனப்பகுதிகளில், வைக்கப்பட்ட எதிர் தீ மட்டுமே தற்போது எரிந்து வருகிறது. 



மேலும், முன்னெச்சரிக்கை கருதி 200க்கும் மேற்பட்ட வனத்துறையினர், வனப்பகுதிக்குள்ளேயே முகாமிட்டுள்ளனர். ஏற்கனவே, வனப்பகுதிக்குள் எரிந்துள்ள மரக்கட்டைகளில் இருந்து தீ பொறி பரவி, மீண்டும் காட்டுத் தீ ஏற்படாமல் இருக்கத் தடுப்பு நடவடிக்கைகளை வனத்துறை மேற்கொள்கிறது. மேலும், வனப்பகுதியில் பரவியிருந்த தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாயென, வனத்துறையால் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...