பொள்ளாச்சியில் பெண்களிடம் நட்பாக பழகி ஆபாச படம் எடுத்து நகை பறிக்கும் கும்பல் கைது : முக்கிய குற்றவாளிக்கு வலைவீச்சு

கோவை : பொள்ளாச்சியில் கடந்த சில நாட்களாக இளம்பெண்களிடம் நட்பாக பழகி ஆபாச படம் எடுத்து, பணம், நகை பறித்து வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


கோவை : பொள்ளாச்சியில் கடந்த சில நாட்களாக இளம்பெண்களிடம் நட்பாக பழகி ஆபாச படம் எடுத்து, பணம், நகை பறித்து வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பொள்ளாச்சியில் சில மாதங்களாக வசதிபடைத்த குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண்களை குறிவைத்து, அவர்களின் தொலைபேசி எண் மற்றும் பேஸ்புக் ஐ.டி.யின் தொடர்பு கொண்டு நட்பாக பழகியுள்ளனர். பின்னர், அவர்களை காரில் அழைத்துச் சென்று ஆபாசமாக செல்போனில் படம் எடுத்து, பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன், அவர்களிடம் பணம் மற்றும் நகைகளை பறித்து வருவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

இந்த நிலையில், பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணிடம், அதேப் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் நட்பாக பழகி வந்துள்ளார். அப்போது, கடந்த 12-ம் தேதி தனது நண்பர்களிடம் அறிமுகம் செய்து வைப்பதாகக் கூறி பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சபேலம்பட்டி காரில் கூட்டி சென்றுள்ளார். அப்போது, காதலன் திருநாவுக்கரசர் அந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த ஆரம்பித்துள்ளான். இதனை காரில் உடனிருந்த நண்பர் சதீஷ் குமார் என்பவர் அதனை ஆபாசமாக படம் பிடித்துள்ளார். 



இதில், அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால், பணம் எடுத்து இணையதளத்தில் போடுவதாகவும், போடாமல் இருக்க பாலியல் இச்சைக்கு வருமாறும், மேலும், பணம், நகை போன்றவற்றை தருமாறும் மிரட்டியுள்ளனர். அப்போது, அந்த இடத்தை விட்டு தப்ப முயன்ற அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்க செயினை மிரட்டி பறித்து அனுப்பி உள்ளனர். பின்னர், இது குறித்து அந்த இளம்பெண், அவரது பெற்றோரிடம் தெரிவித்து, பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில் இன்று அதிகாலை ஜோதி நகர் பகுதியில் காரில் வந்த சதீஷ், சபரிராஜன் மற்றும் வசந்த குமார் ஆகியோரை பிடித்து விசாரணை செய்தபோது, அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர், பின்னர், மூவரையும் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த காரையும் பறிமுதல் செய்தனர், இதில், முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு என்பவர் தலைமறைவாகி இருப்பதால், அவரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். பொள்ளாச்சி பகுதியில் 60-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இதுபோன்ற சம்பவங்கள் ஏற்பட்டிருப்பது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 



முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை கைது செய்தால், பொள்ளாச்சி பகுதியில் அண்மைக்காலமாக இதுபோன்ற இளம் பெண்களை கூட்டிச் சென்று மிரட்டி, பாலியல் தொந்தரவு மற்றும் பணம், நகை பறிக்கும் கும்பலை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், பொள்ளாச்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களின் மகன்களும் சிக்குவார்கள் என கூறப்படுகிறது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...