திருப்பூர் : தமிழகத்தில் 6 மாநகராட்சிகளில் மட்டுமே செயல்பட்டு வந்த பன்முக கால்நடை மருத்துவமனை, 12 மாநகராட்சிகளிலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக திருப்பூரில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாநகராட்சியில் செயல்பட்டு வந்த கால்நடை மருத்துவமனை 24 மணி நேரமாக செயல்படக்கூடிய கால்நடை பன்முக மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- 6 மாநகராட்சிகளில் செயல்பட்டு வந்த கால்நடை பன்முக மருத்துவமனை திருப்பூர் உட்பட 12 மாநகராட்சிகளிலும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக பணியாற்ற சுழற்சி அடிப்படையில் 4 மருத்துவர்கள் பணிபுரிவார்கள். மேலும், அல்ட்ரா ஸ்கேன், டிஜிட்டல் ஸ்கேனர் வசதிகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்திலிருந்து திருப்பூர் பிரிக்கப்பட்டதிலிருந்து கட்டிட வரைபடத்திற்கு அனுமதி பெற கோவை அல்லது சேலத்திலிருந்த நகரமைப்பு அலுவலகத்தை அணுக வேண்டிய நிலையினை மாற்றி, தற்போது திருப்பூரிலேயே அனுமதி பெறக்கூடிய வகையில் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. அரசியல் கூட்டணி குறித்தெல்லாம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள், துணை ஒருங்கிணைப்பாளர்கள் முடிவு செய்வார்கள், என்றார்.

இந்த நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் சத்யபாமா, மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.