அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட சொல்லி எம்.ஜி.ஆர் என்னை வாழ்த்தினார் :கேரள ஆளுநர் நெகிழ்ச்சி

கேரள மாநிலம் பாலக்காட்டில் புனரமைக்கப்பட்ட எம்ஜிஆர் நினைவு இல்லத்தைத் திறந்து வைக்கும் விழாவில், கலந்து கொண்ட கேரள ஆளுநர் எம்ஜிஆருக்கும் தனக்கும் உள்ள சந்திப்பு குறித்து மனம் திறந்து பேசினார்.


கேரள மாநிலம் பாலக்காட்டில் புனரமைக்கப்பட்ட எம்ஜிஆர் நினைவு இல்லத்தைத் திறந்து வைக்கும் விழாவில், கலந்து கொண்ட கேரள ஆளுநர் எம்ஜிஆருக்கும் தனக்கும் உள்ள சந்திப்பு குறித்து மனம் திறந்து பேசினார். 



தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் நிறுவனருமான எம்.ஜி.ராமச்சந்திரனின் நினைவு இல்லம், பாலக்காடு மாவட்டம் வடவனூரில் அமைந்துள்ளது. இந்த இல்லம் பழுதடைந்து முட்புதர்களால் மண்டிக் கிடந்தது. இதை பத்திரிக்கை செய்தி வழியாக, உலக எம்.ஜி.ஆர் பேரவைத் தலைவரும், மனித நேய ஐ.ஏ.எஸ் அகடாமியின் தலைவருமான சைதை துரைசாமி தெரிந்து கொண்டார். 



இதையடுத்து, அந்த நினைவு இல்லத்தைப் புனரமைக்க முன்வந்தார். கடந்த ஓராண்டுக்கு மேல், எவ்வித பழமையும் மாறாமல் புனரமைக்கப்பட்டு, இன்று இல்லம் திறந்து வைக்கப்பட்டது. இதனைக் கேரள ஆளுநரும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான சதாசிவம் திறந்து வைத்தார். 



இதையடுத்து, நிகழ்ச்சியில் கேரள ஆளுநர் சதாசிவம் பேசியதாவது :- மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றதோடு, மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரன் என அன்போடு அழைக்கப்படும், எம்.ஜி.ஆரின் புனரமைக்கப்பட்ட இல்லத்தைத் திறந்து வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். எம்.ஜி.ஆர் மக்களுக்காகவே அயராது உழைத்தவர். தன்னலம் மறந்த தலைவரின் பிம்பமாகவே எம்.ஜி.ஆரை மானசீகமாக நினைத்து, மக்கள் ஏற்றுக் கொண்டனர், இவ்வாறு அவர் பேசினார். 

இதனிடையே, மேடையில் பேசிக் கொண்டிருந்த போது, ஓடி ஒடி உழைக்கணும், ஊருக்கெல்லாம் கொடுக்கணும் என்ற பாடல் வரிகளைப் பாடிய ஆளுநர் சதாசிவம், "எம்ஜிஆர் தன் உழைப்பு அனைத்தையும் மக்களுக்காக கொடுக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் வாழ்ந்தவர்", என்றார். 

"இந்திய சீனப் போர் நடந்த காலக்கட்டத்தில், ரூ.75 ஆயிரம் நிதியை அன்றைய பிரதமர் நேருவிடம் கொடுத்து, காமராஜர் உள்ளிட்டோரிடம் நற்பெயரை வாங்கியவர். அனைத்து தரப்பு மக்களையும் புரிந்து கொண்ட காரணத்தினாலே, அவர் மக்கள் மக்கள் தலைவராக விளங்கினார். 

மேலும், அவரை நான் ஒருமுறை சந்தித்தேன். இதுவரை அதை வேறெங்கும் பகிர்ந்து கொள்ளவில்லை. 1973ம் ஆண்டு சட்டப்படிப்பு முடித்து வழக்கறிஞராக பணியில் சேர தயாராகினேன். நீதிமன்றத்திற்கு செல்லும் அந்த முதல் நாளில், காலை 8 மணியளவில் எம்ஜிஆரின் இல்லத்திற்கு சென்றேன். அப்போது, அவரைக் காண ஏராளமானோர் காத்திருந்தனர். ஜே.பி.ஆர் அவர்கள் வந்திருந்த அனைவரது பார்வையாளர் அட்டையையும் (விசிடிங் கார்டு) வாங்கினார். 

அப்போது, நான் ஒரு துண்டு காகிதத்தில், நான் எதற்காக சந்திக்க வந்தேன் என்பது குறித்து எழுதிக் கொடுத்தேன். அதனை ஜே.பி.ஆர் உள்ளே சென்று கொடுத்ததும், முதலில் என்னை தான் எம்.ஜி.ஆர் பார்க்க அழைத்தார். இதையடுத்து, அந்த இடத்திலிருந்த பி.எச்.பாண்டியன், தொழில் அதிபர் நா.மகாலிங்கம் உள்ளிட்ட அனைவருக்கிடையிலும் சலசலப்பு ஏற்பட்டது. 

இந்நிலையில், எம்ஜிஆர் என்னிடம் பேசும் போது, இன்று நீங்கள் நீதிமன்றத்திற்கு செல்லக்கூடிய முதல் நாள். அதனால் தான் உங்களை முதலில் அழைத்தேன். அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்படுங்கள், என என்னை வாழ்த்திப் பேசினார். அதன் பிறகு,அவரது உதவியாளர் மூலம் நான் அவரிடம் ஆசிபெற்ற புகைப்படத்தை எனக்கு அனுப்பினார். இது என் வாழ்வின் நெகிழ்வான தருணம். 

எம்.ஜி.ஆரின் வழிகாட்டுதலின் பேரிலே ஜெயலலிதா சிறப்பாகச் செயல்பட்டார். கோவில்களைக் காப்பாற்றுவதில் அவர் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டது போல, அவரது நினைவு இல்லத்தைப் பாதுகாப்பதில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். இதற்காக, முயற்சி எடுத்த சைதை துரைசாமி உள்ளிட்ட எல்லோருக்கும் என் பாராட்டுகள்," என்றார், கேரள ஆளுநர் சதாசிவம். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...