கோவை : இந்திய அளவில் காவல்துறை அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற வாத்திய இசைக்குழு போட்டியில், இரண்டாம் இடத்தைப் பிடித்த கோவை காவலர்கள் இருவருக்கு, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

அனைத்திந்திய போலீஸ் விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணைப்படி, 19வது அனைத்திந்திய போலீஸ் பேண்ட் போட்டியினை, ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில காவல்துறையினர் நடத்தினர். அதில், 18 மாநிலம் மற்றும் 6 யூனியன் பிரதேசங்களை சேர்ந்த வாத்திய இசைக்குழுவினர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தின் சார்பில், கோவையிலிருந்து, போலீஸ் கான்ஸ்டெபிள் எம். வேல்முருகன் மற்றும் தலைமை கான்ஸ்டபிள் எக்ஸ்.அலெக்ஸ்சாண்டர் ஆகியோர் பக்ளர் பிரிவில் பங்கேற்றனர். இதையடுத்து, சிறப்பாக வாசிப்புத் திறமையை வெளிப்படுத்திய, இருவரும் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர்.
இந்நிலையில், வெற்றி பெற்ற இரண்டு காவலர்களையும் இன்று சந்தித்த கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் ஐ.பி.எஸ், அவர்களை பாராட்டினார்.