சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள பந்திப்பூர் தேசியப் பூங்கா பகுதியில், ஏற்பட்ட தீ விபத்தில் கருகியதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் புகைப்படங்கள் உண்மையானவை அல்ல, என கர்நாடகா வனத்துறை ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

அந்த ட்வீட் குறிப்பில் கூறியிருப்பதாவது :- தீத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளும் சமயத்தில், நாங்கள் எந்த இறந்த உயிரினங்களையும் கடந்து வரவில்லை.

ஆனால், சமூக வலைதளங்களில், செய்திகளில் வெளிவரும் புகைப்படங்கள் உண்மைக்கு அப்பால் உள்ளது., எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து சூழலியளார்கள் கூறும் போது, வனத்துறையின் தரப்பை ஏற்றுக்கொள்கிறார்கள்.

"கருகிய நிலையில், முயல்கள், மான்களுடன் இருக்கும் உராங்குட்டான் புகைப்படங்கள் வைரலாகப் பரவி வருகின்றன. இந்தியா முழுக்கவும் உராங்குட்டான் ஒன்று கூட இல்லையெனும் போது, அந்த புகைப்படத்தில் மட்டும் எப்படி வந்தது. அது நிச்சயமாக வெளிநாடுகளில் உள்ள காடுகள் ஏற்பட்ட தீ விபத்தின் போது எடுத்தவையாக இருக்கக்கூடும்.

வனத்துறையினர் பந்திப்பூர் வனப்பகுதியில் பரவி எரிந்து கொண்டிருக்கும் தீயை, முதுமலை வனப்பகுதிக்குள் வராமல் தடுத்துக் கொண்டிருக்கின்றனர். முழுமையாக, தீயணைப்பு பணிகள் நிறைவடைந்த பின் தான் எத்தனை வன உயிரிகளின் உயிர் சேதமடைந்துள்ளது என கணக்கிட முடியும். இந்நிலையில், இது போன்ற தவறான தரவுகளுடைய புகைப்படங்களைப் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், என்கிறார், சூழலியலார் ஒருவர்.

மேலும், கடந்த 5 நாட்களாக பெரியளவில் நடந்த இந்த காட்டுத் தீ விபத்தில், பந்திப்பூர் புலிகள் பாதுகாப்பு வனச்சரணாலயத்தில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேலாக சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த தீயணைப்பு பணியில் வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் என பல்வேறு அமைப்புகளில் உள்ளோரும் திரண்டு செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த தீ முதுமலை வனப்பகுதியிலும் பரவி சேதம் விளைவித்துக் கொண்டிருக்கிறது. இதனிடையே, கேரள வனத்துறையினரும் எல்லையில் உள்ள வனப்பகுதியில், காட்டுத்தீயைத் தடுக்க பாதுகாப்பைப் பலப்படுத்திக் கண்காணித்துக் கொண்டிருக்கிறது.