கோவை: கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ரெயின்போ பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்பது இல்லை எனக்கூறி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

ரெயின்போ பேருந்து நிறுத்தத்தை சுற்றி ஹைவேஸ் காலணி, கிழக்கு கிளப் சாலை பகுதி, உள்ளிட்ட பகுதிகளில் 200 - க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இந்த பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் ரெயின்போ பேருந்து நிலையத்திற்கு அடுத்துள்ள அரசு மருத்துவமனை, சுங்கம் பேருந்து நிலையத்தில் நின்று செல்கின்றன. இதனால் வயதானவர்கள், பெண்கள் குழந்தைகள் என அனைத்து தரப்பு மக்களும் 2 கீ.லோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இதனை கண்டித்து இப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர். ரேஸ்கோஸ் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மக்களை சமரசம் செய்தனர். இதனை அடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.