திருப்பூர் : ஸ்டாலின் தளபதியாக இருப்பதற்கு தகுதியானவரே தவிர, தலைமை பொறுப்பேற்கத் தமிழகத்திலே தகுதியற்றவர் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திருப்பூரில் பேசியுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில், முன்னால் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு 7,100 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது ;- ஸ்டாலின் சொல்வதைக் கேட்கும் போது எனக்கு வியப்பாக இருக்கிறது. திருப்பூரில் ஏற்றுமதியாளர்கள் நிறைந்திருக்கிறார்கள். ஆகவே, இங்கு துறைமுகத்தை விரிவுபடுத்தப்போகிறேன் என ஸ்டாலின் பேசி இருக்கிறார். இது வேடிக்கையாக இருக்கிறது. 400 கிலோமீட்டருக்கு அப்பால் கடல் உள்ள நிலையில், திருப்பூரில் உள்ளவர்களுக்குத் துறைமுகத்தை விரிவுபடுத்தப்போகிறேன் என்கிறார். இதிலிருந்தே, அவர் தளபதியாக இருக்கத் தகுதியானவரே தவிர, தமிழகத்தில் தலைமை பொறுப்பேற்க அல்ல எனத் தெரிகிறது. மேலும், 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும், இவ்வாறு அவர் பேசினார்.