கோவை : தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் முறைப்படி சட்டம் 2014-ன்படி அனைத்து விடுதிகளும் பதிவு செய்ய வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- கோவை மாவட்டத்தில் அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள், தனியார் மற்றும் மத அமைப்புகள் நடத்தும் வீட்டை விட்டு வெளியே தங்கும் பெண்கள், பெண் குழந்தைகள், சிறார் இல்லங்கள், மாணவியர் விடுதிகள், பணிபுரியும் மகளிர் விடுதிகள் ஆகிய இல்லவகைகள் எதுவாகிலும், அதனை தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் முறைப்படுத்தும் சட்டம் 2014-ன்படி பதிவு செய்ய வேண்டும்.
மேலும், பதிவு செய்யாதவர்களுக்கு மேற்குறிப்பிட்ட சட்டத்தின்படி, 2 ஆண்டு வரை சிறை தண்டனையும், ரூ. 50,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படும் என்பதால், குழந்தைகள் மற்றும் மகளிருக்கான விடுதிகளை நடத்தும் அனைவரும் கட்டாயமாக விடுதல் இன்றி 28-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்யாமல் நடத்தப்படும் விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஆய்வுக்குழுவினரால் பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கூடுதல் விபரங்களுக்கு Coimbatore.nic. என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.