முதுமலை காட்டுத்தீயில் இருந்து வனத்துறையினரால் காப்பாற்றப்பட்ட மலைப்பாம்பு

நீலகிரி : முதுமலை வனப்பகுதியில் காட்டுத் தீயில் இருந்து பத்திரமாக காப்பாற்றப்பட்ட மலைப்பாம்பு, பாதுகாப்பான வனப்பகுதியில் விடப்பட்டது.

நீலகிரி : முதுமலை வனப்பகுதியில் காட்டுத் தீயில் இருந்து பத்திரமாக காப்பாற்றப்பட்ட மலைப்பாம்பு, பாதுகாப்பான வனப்பகுதியில் விடப்பட்டது.

முதுமலை புலிகள் காப்பக வெளிவட்ட வனப்பகுதியான மன்றாடியார் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட காட்டுத்தீ, தொடர்ந்து எரிந்து வருகிறது. காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான வனத்துறை ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும், காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது. நூற்றுக்கும் அதிகமான ஏக்கர் நிலங்களில் உள்ள புல்வெளிகள், செடிகள் எரிந்து சாம்பலாகின. இந்தக் காட்டுத் தீயில் ஊர்வன உள்ளிட்ட பல்வேறு நுண்ணுயிர்கள் அழிந்து போயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. யானை உள்ளிட்ட பெரிய உயிரினங்கள் காட்டுத்தீ இருந்து தப்பித்து பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்று விட்டதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை ஊழியர்கள், கண்களில் மலைப்பாம்பு ஒன்று காட்டுத் தீயில் இருந்து தப்பித்து மயங்கி கிடப்பதை பார்த்து உள்ளனர். இதனை அடுத்து, சுமார் 15 அடி நீளமுள்ள அந்த மலைப் பாம்பை அங்கிருந்து அகற்றி, அதன் மீது தண்ணீர் ஊற்றி வெப்பத்தால் தவித்த பாம்பை பாதுகாத்து உள்ளனர். பின்னர், வனத்துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி, மலைப்பாம்பு, காட்டுத்தீ ஏற்படாத பாதுகாப்பான மாயாற்றை ஒட்டிய பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டுள்ளது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...