கோவை : இந்தியாவில் உள்ள கல்வி மற்றும் மருத்துவம் ஆகியவை சர்வதேச அளவிற்கு சிறப்பான முறையில் வளர்ச்சி அடைந்துள்ளதாக கோவையில் ஐக்கிய அரபு நாடுகளின் இளவரசி ஷிக்கா ஹெண்ட் அல் கசீமி புகழாரம் சூட்டினார்.

நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச உயர்கல்விக் கூட்டமைப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஐக்கிய அரபு நாடுகளின் இளவரசி ஷிக்கா ஹெண்ட் அல் கசீமி பங்கேற்றார். அவரை நேரு கல்வி குழும தலைமை நிர்வாக அதிகாரியும், செயலாளருமான டாக்டர் பி. கிருஷ்ணகுமார் மற்றும் கல்லூரி முதல்வர் டாக்டர். பி. அனிருத்தன் ஆகியோர் வரவேற்றனர்.
இந்த நிகழ்வில் இளவரசி அல் கசீமி இந்தியாவில் போதிக்கப்படும் உயர்கல்வி குறித்து பேசினார். அவர் பேசியதாவது :- இந்தியாவில் உள்ள பல்வேறு கலாச்சாரங்களைப் பார்த்து வியப்படைந்தேன். இந்தியாவில் உள்ள கல்வி மற்றும் மருத்துவம் ஆகியவை சர்வதேச அளவிற்கு சிறப்பான முறையில் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்திய மாணவர்கள் சர்வதேசத் தரத்தில் கல்வியைப் பெறுவதுடன் நாட்டின் வளர்ச்சிக்கும் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் சிறப்பான வளர்ச்சியைப் பெற்று வருகின்றன. குறிப்பாக, தனியார் கல்வி நிறுவனங்கள், சிறப்பான கல்வியை மக்களுக்கு வழங்கி வருகிறது. எனது நாடான சார்ஜாவில் கல்வி வளர்ச்சி மிக உயர்ந்த நிலையில் உள்ளது. அதேபோல, மருத்துவத் துறையிலும் எங்கள் நாடு சிறப்பான வளர்ச்சியை அடைந்து விட்டது. எங்கள் நாட்டைப் போலவே இந்தியாவும் அனைத்துத் துறைகளிலும், குறிப்பாக கல்வித் துறையில் சிறப்பான வளர்ச்சியைப் பெற்று வருகிறது.
நாட்டின் வளர்ச்சிக்கு இந்திய மாணவர்கள் அரும்பாடுபட்டு வருகின்றனர். சர்வதேச அளவில் இந்திய மாணவர்களின் திறன் மிகவும் மதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கூகுள் மற்றும் நாசா போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் அதிகப்படியான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதுவே சர்வதேச அளவில் இந்தியர்களின் முக்கியத்துவத்திற்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது. அனைத்து நாடுகளுமே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன. குறிப்பாக, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் வறுமை ஆகியவை முக்கிய பிரச்சனைகளாக பெரும்பாலான நாடுகளில் கருதப்படுகிறது. இந்தியாவும் இத்தகைய பிரச்சனைகளை நாள்தோறும் சந்தித்து வந்தாலும், அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் வல்லமை இந்தியர்களிடம் உள்ளது.
இந்தியா தகவல் தொழில்நுட்பத்துறையில் அதிவேக வளர்ச்சியை அடைந்து வருகிறது. குறிப்பாக ஆசியாவில் சிலிக்கன் பள்ளத்தாக்காக இந்தியா உலகம் முழுவதும் அறியப் படுகிறது. கடந்த 20 ஆண்டுகளாக இந்தியர்களின் கடுமையான உழைப்பால் இத்தகைய சிறப்பான நிலையை இந்தியாவால் அடைய முடிந்தது. இந்தியாவில் வறுமை ஒழிப்புக்கு தகவல் தொழில்நுட்பத் துறையைப் பயன்படுத்த வேண்டும்.
பன்னாட்டு நிறுவனங்களான கூகுள் மற்றும் நாசா ஆகியவற்றில் அதிகப்படியான இந்தியர்கள் வேலை செய்து வருகின்றனர். கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் மொத்த பணியாளர்களில் 20 முதல் 30 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பது பெருமையாக உள்ளது. இதையெல்லாம் பார்க்கும்போது இந்தியர்களின் திறனை உலகமே மதிக்கிறது என்று கூறினால், அது மிகையாகாது, என்றார்.
உலகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களுக்கும் கல்வி சேர வேண்டும் என்ற நோக்கத்தோடு இளவரசி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக தான் இளவரசி இந்தியாவிற்கு வந்துள்ளார். இதைத் தொடர்ந்து தங்களது நாட்டில் உயர்கல்வித்துறையில் நேரு குழும கல்வி நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டும் என இளவரசி கேட்டுக்கொண்டார்.