வெற்றிகரமான சிகிச்சையால் கேரளாவைச் சேர்ந்த 3 வயது குழந்தை உயிர்பிழைப்பு : கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்குப் பெற்றோர் நன்றி

கோவை : கேரள மாநிலத்திலிருந்து ஆபத்தான சூழலில் சிகிச்சைகாக அழைத்து வரப்பட்ட 3 வயது குழந்தைக்கு, உரிய சிகிச்சை கொடுத்து உடல்நலம் பெற வைத்த கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

கோவை : கேரள மாநிலத்திலிருந்து ஆபத்தான சூழலில் சிகிச்சைகாக அழைத்து வரப்பட்ட 3 வயது குழந்தைக்கு, உரிய சிகிச்சை கொடுத்து உடல்நலம் பெற வைத்த கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலம் மூணாறு மறையூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் முனியாண்டி மற்றும் ரெஜிதா. இவர்களுக்கு நிரஞ்சனா என்ற 3 வயது பெண் குழந்தை உள்ளது. மலைவாழ் மக்களான இந்த தம்பதியினர், கிடைக்கும் வேலைக்கு சென்று தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், குழந்தை நிரஞ்சனா கடந்த ஜனவரி மாதம் 27-ம் தேதி விளையாடிக் கொண்டிருக்கும் போது, கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டது. 

பின்னர், உடனடியாக பெற்றோர்கள் குழந்தையை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், குழந்தைக்கு சிகிச்சை கொடுக்க போதிய வசதியில்லாததால், குழந்தையை அழைத்துக்கொண்டு உடுமலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தைக்கு மேல் சிகிச்சை கொடுப்பதற்காக அன்றே கோவை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். 

இதைத் தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த பெற்றோர்கள், குழந்தைக்கு உரிய சிகிச்சை கொடுக்க கோவை அரசு மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அலுவலர் டாக்டர். சவுந்தரவேலிடம் உதவி கோரினர். பின்னர், மருத்துவ அலுவலரின் அறிவுரையின்படி, குழந்தைக்கு 15 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், குழந்தையின் மூளை நரம்பில் ஏற்பட்ட பாதிப்புகள் மெல்ல மெல்ல சரியாகியுள்ளது. 



இதையடுத்து, குழந்தையின் பெற்றோர்கள் இருப்பிடம் மருத்துவருக்கும், கோவை அரசு மருத்துவமனையின் மருத்துவர்களுக்கும் தங்களது நன்றியினை தெரிவித்து விட்டு, சொந்த ஊருக்கு திரும்பினர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...