வடவள்ளி அருகே அதிகவிலைக்கு மது விற்றதால் ஆத்திரம் : பார் உரிமையாளரை அரிவாளால் வெட்டிய கும்பல்

கோவை : வடவள்ளி அருகே டாஸ்மார்க் கடை மூடிய நிலையில், மதுவை அதிக விலைக்கு விற்றதால் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, பார் உரிமையாளரை இளைஞர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : வடவள்ளி அருகே டாஸ்மார்க் கடை மூடிய நிலையில், மதுவை அதிக விலைக்கு விற்றதால் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, பார் உரிமையாளரை இளைஞர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு அடைக்கப்படுகிறது. ஆனால், கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு டாஸ்மாக் கடைகளில் 24 மணி நேரமும் மதுவிற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், இங்கு மது விற்பனை விலையை விட அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அதேபோல, மதுபான கடைகளுக்கு அரசு விடுமுறை என அறிவித்திருந்தாலும், சாதாரண நாட்களில் அதிகபட்சமாக விற்பதைவிட இரண்டு மடங்கு கூடுதல் விலைக்கு மது விற்கப்படுகிறது. இது மது பிரியர்கள் மத்தியில் பார் உரிமையாளர்கள் மேல் கோபத்தை ஏற்படுத்துகிறது. இந்த சம்பவங்களால் ஆங்காங்கே பிரச்சனைகள் மூண்டு வருகின்றன.

இந்த நிலையில், நேற்று இரவு மதுக்கடைகள் வழக்கம்போல, 10 மணிக்கு மூடப்பட்டுவிட்டது. பின்னர், 10.30 மணியளவில் வடவள்ளி சிறுவாணி மெயின் ரோட்டில் இருக்கும் டாஸ்மாக்கிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 இளைஞர்கள் பார் உரிமையாளர் பழம்பதியிடம் மது கேட்டுள்ளனர். அப்போது, பார் உரிமையாளர் பழம்பதி அதிக விலைக்கு மதுவை விற்பனை செய்துள்ளார். இதனால், வாலிபர்களுக்கும், பார் உரிமையாளருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. 

ஒருகட்டத்தில் பாரில் வேலை செய்யும் ஊழியர்கள் வந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்ட 2 இளைஞர்களை தாக்கி, அவர்களிடம் இருந்த செல்போன் மற்றும் இருசக்கர வாகனங்களைப் பறித்தனர். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக அந்த இரு இளைஞர்கள் தங்களது நண்பர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, பார் உரிமையாளர் பழம்பதி மகாராணி அவென்யூ சந்திப்பு அருகே வந்தபோது, அந்த இளைஞர்களின் நண்பர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

அப்போது, ஆத்திரமடைந்த இளைஞரின் நண்பர்கள் பழம்பதியை அரிவாளால் வெட்டினர். இதையடுத்து, சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வருவதைக் கண்டு அனைவரும் தப்பித்து ஓடினர். மேலும், பலத்த காயமடைந்த பார் உரிமையாளர் பழம்பதிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, பார் உரிமையாளரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை வடவள்ளி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...