கூட்டுப்பண்ணையத் திட்டத்தின் கீழ் சுல்தான்பேட்டை விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் விநியோகம்

கோவை : சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு கூட்டுப்பண்ணையத் திட்டத்தின் கீழ், 6 ட்ராக்டர் இயந்திரங்களை சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் நேற்று வழங்கினார்.


கோவை : சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு கூட்டுப்பண்ணையத் திட்டத்தின் கீழ், 6 ட்ராக்டர் இயந்திரங்களை சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் நேற்று வழங்கினார்.

தமிழக அரசால் 2017-ம் ஆண்டு முதல் கூட்டுப்பண்ணையத் திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் உருவாக்கப்பட்டு, ஆண்டுதோறும் ரூ. 5 லட்சம் உதவித்தொகை வழங்கப்படுகின்றது. அந்த வகையில், கோவை மாவட்டத்தில் உள்ள 12 வட்டாரங்களை உள்ளடக்கி மொத்தம் 37 குழுக்கள் இயங்கி வருகின்றன. இதில், இந்த ஆண்டு இணைக்கப்பட்டுள்ள 19 குழுக்களுக்கான உதவித் தொகை உழவர் குழுக்களுக்கு நேரடியாகவும், வேளாண் இயந்திரங்களுக்கான மானியங்களாகவும் வழங்கப்பட்டு வருகின்றன.



இத்திட்டத்தின் கீழ் சுல்தான்பேட்டையில் இயங்கி வரும் விவசாயிகளுக்கான 6 ட்ராக்டர் இயந்திரங்களை வழங்கும் விழா, சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு முதல் தவணைக்கான நிதியும் வழங்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய அரசு திட்டம்) முனைவர். டாம் பி சிலாஸ், வேளாண் உதவி இயக்குநர் ஷஃபி அஹமத், வேளாண் அலுவலர் சாம் ராவேல், வேளாண் அலுவலர் குருசாமி, வட்டார அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.  



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...