கூட்டணி விவகாரம் : பத்திரிக்கையாளர்களின் கேள்விகளை சமாளிக்க முடியாமல் திணறிய அன்புமணி ராமதாஸ்

அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தது தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் அடுத்தடுத்து தொடுத்த கேள்வி கனைகளுக்கு பதிலளிக்க முடியாமல் பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ் திணறினார்.

அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தது தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் அடுத்தடுத்து தொடுத்த கேள்வி கனைகளுக்கு பதிலளிக்க முடியாமல் பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ் திணறினார். 

பல ஆண்டுகளாக அ.தி.மு.க., அரசு மற்றும் மாநில அமைச்சர்கள், ஆட்சியாளர்களைக் கடுமையாக விமர்சித்து வந்த பா.ம.க., மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தது. அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க., கூட்டணி தொடர்பாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. 

இந்த நிலையில், விமர்சனங்கள், கூட்டணி தொடர்பாக விளக்கம் அளிக்கும் வகையில் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளா்களை சந்தித்தார். அப்போது, அ.தி.மு.க.,வை விமா்சித்துவிட்டு, தற்போது அந்த கட்சியுடனே கூட்டணி வைக்கிறீர்கள் என்று கூறுகிறீர்கள் என பத்திரிக்கையாளர்கள் தங்களது முதல் கேள்வியை முன்வைத்தனர்.

இதற்கு, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து விட்டு தற்போது கூட்டணி அமைத்துள்ளன. அது போன்று தான் இதுவும். தமிழகத்தில் தற்போது சூழல் மாறியுள்ளதால் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்துள்ளோம். அமைச்சர்கள் மீதான ஊழல்கள் குறித்து ஆளுநரிடம் வழங்கப்பட்ட புகாரில், எந்தவித பின்வாங்கலும் இல்லை. அந்த விசாரணை நடைபெற்று தான் வருகிறது, என்றார். 



 

மேலும், குட்கா ஊழல் உட்பட தமிழக அரசு மீதான பல்வேறு ஊழல்கள் குறித்து செய்தியாளா்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் அன்புமணி திணறினார். ஒரு கட்டத்தில் செய்தியாளர்களின் கேள்விகளால், அதிர்ச்சியடைந்த அவர், பத்திரிக்கையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனிடையே, பத்திரிக்கையாளர்கள் கேள்விகளால் கோபமடைந்த அன்புமணி, பத்திரிகையாளர் ஒருவருக்கு, ”அவருக்கு தண்ணி கொடுங்கப்பா” ரொம்ப ஆவேசமா இருக்காரு என சிரித்து சமாளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கூட்டணி தொடர்பாக தி.மு.க., உட்பட அனைத்து பிரதானக் கட்சிகளும் தொடக்கக் காலத்தில் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தின. மாற்றம் முன்னேற்றம் என்ற புதிய வியூகத்துடன் நாங்கள் தனித்து போட்டியிட்ட போது, மக்கள் ஒரு சட்டப்பேரவை உறுப்பினரைக் கூட கொடுக்கவில்லை. அ.தி.மு.க., அரசால் முன்மொழியப்படும் 8 வழிச்சாலை திட்டத்திற்கு பா.ம.க. தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும், எனக் கூறினார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...