பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் இணைய சிறப்பு முகாம் : கோவை மாவட்ட வேளாண்துறை அறிவிப்பு

கோவை : பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் இணைய விரும்பும் கோவை மாவட்ட விவசாயிகள், 25-ம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பானுமதி தெரிவித்துள்ளார்.

கோவை : பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் இணைய விரும்பும் கோவை மாவட்ட விவசாயிகள், 25-ம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பானுமதி தெரிவித்துள்ளார்.

சிறு மற்றும் குறு விவசாயிகளின் வருமானத்தை அதிகப்படுத்தும் நோக்கில், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிதியானது, நான்கு மாதங்களுக்கு ஒரு முறையென மூன்று தவணையாக வழங்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இதுவரையில் சுமார் 69,000 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதில், தகுதியான 36,016 விவசாயிகளின் மனுக்கள் ஏற்கப்பட்டு, இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, முதல் தவணையாக ரூ. 2,000 இணைக்கப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் இணைய விரும்பும், 5 ஏக்கருக்குள் நிலம் கொண்டுள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் 25-ம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை, சிட்டா, ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு ஆவணங்களை அருகிலுள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் சமர்ப்பித்து, இத்திட்டத்தின்கீழ் பயன்பெறலாம் என கோவை மாவட்ட வேளாண்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...