திருப்பூரில் கோழிப்பண்ணையால் ஈ தொல்லை : சுகாதார நடவடிக்கை எடுக்கப் பொதுமக்கள் கோரிக்கை

திருப்பூர் : காசிலிங்கம்பாளையம் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வரும் முட்டை கோழிப்பண்ணை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர் : காசிலிங்கம்பாளையம் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வரும் முட்டை கோழிப்பண்ணை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 



திருப்பூர் மாவட்டம், குண்டடம் அடுத்த காசிலிங்கம்பாளையம் பகுதியில் தனியார் முட்டை கோழிப்பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த பண்ணையில், சுகாதாரப் பணிகளை முறையாக மேற்கொள்ளாததால், கோழி கழிவுகளின் மூலமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. 

இதனால், கடுமையான துர்நாற்றம் வீசுவதோடு, ஈ தொல்லையும் அதிக அளவில் உள்ளது. மேலும், இப்பகுதியில் உள்ள வீடுகளில் குழந்தைகளுடன் குடியிருக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வரும் முட்டை கோழிப்பண்ணை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...