திருப்பூர் : தனியார் பள்ளி கட்டிடத்தில் 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக, உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் சி.எஸ்.ஐ., பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நவ்யா என்ற மாணவி 10-ம் வகுப்பு பயின்று வந்தார். இவர், கடந்த 9-ம் தேதி பள்ளியின் கணினி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மாணவியின் பெற்றோருக்குப் பள்ளி நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்படாமலும், பெற்றோரின் அனுமதியின்றி பிரேதப் பரிசோதனை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால், அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், நவ்யவின் மரணம் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்துள்ளனர். அப்போது, மற்றொரு மாணவியின் பையிலிருந்து கேக் எடுத்து சாப்பிட்டதாகவும், அதனை கண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இதனிடையே, மற்றொருவரிடம் விசாரித்ததில், மாணவியின் பையில் காதல் கடிதம் இருந்ததாகவும், அது தொடர்பாக விசாரித்ததில் மாணவி நவ்யா இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாகவும், முன்னுக்குப்பின் முரணாக பல்வேறு பதில்கள் கிடைத்தன.
எனவே, மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், பள்ளி நிர்வாகத்தினர் தனது மகளை கொலை செய்து விட்டதாகவும் கூறி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை முறையாக மேற்கொண்டு, மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.