கோவை : மோப்பிரிபாளையம் பகுதியில் நிலத்தடி நீரை மாசுபடுத்தும் தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாசுபட்ட தண்ணீர் பாட்டில்களுடன் வந்து பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை : மோப்பிரிபாளையம் பகுதியில் நிலத்தடி நீரை மாசுபடுத்தும் தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாசுபட்ட தண்ணீர் பாட்டில்களுடன் வந்து பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் மோப்பிரிபாளையம் பகுதியில் ஸ்ரீ காரா இஞ்சினியரிங் என்ற பவுடர் பெயிண்டிங் கம்பெனி இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் கழிவு நீர், ஆழ்துளை கிணற்றில் விடுவதாலும், இரவு நேரங்களில் புகையினை வெளியேற்றுவதாகவும் கூறப்படுகிறது. இதனால், நிலத்தடி நீர் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், பொதுமக்களுக்கும் நோய்கள் ஏற்படுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்த நிலையில், அந்நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாசுபட்ட தண்ணீரை, பாட்டில்களில் அடைத்து எடுத்து வந்து, கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.