கோவையில் நீதிமன்ற வளாகத்தில் சாணி பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்றவரால் பரபரப்பு

கோவை : கோவையில் குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜர் ஆக வந்தவர் சாணி பவுடரை அருந்தி, நீதிமன்ற வளாகத்தில் தற்கொலை முயற்சி மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை : கோவையில் குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜர் ஆக வந்தவர் சாணி பவுடரை அருந்தி, நீதிமன்ற வளாகத்தில் தற்கொலை முயற்சி மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளுக்காகத் தினமும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், சேலம் கன்னக்குறிச்சியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாண்டுரங்கன் (44), மற்றும் இவரது மனைவி கவிதா ஆகியோருக்கு இடையில் இருந்த கருத்து வேறுபாடு காரணமாக, குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்துக்கு விண்ணப்பித்துள்ளனர். 

இந்த வழக்கு விசாரணை கடந்த 9 ஆண்டுகாலமாக நடந்து வந்ததால், பாண்டுரங்கன் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதையடுத்து, இன்று வழக்கு விசாரணைக்காக குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜர் ஆக வந்தவர், நீதிபதியிடம் வழக்கை விரைந்து முடித்துக் கொடுக்க வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, நீதிமன்ற வளாகத்தில் சாணி பவுடரை அருந்தி, பாண்டுரங்கன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், நீதிமன்ற வளாகத்திலேயே ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...