மத்திய அரசின் ஊக்கத்தொகையை குளம் தூர்வாரும் பணிக்கு நன்கொடையளித்த கோவை விவசாயி

கோவை : மத்திய அரசு வழங்கியுள்ள சிறு, குறு விவசாயிகளுக்கான கவுரவ ஊக்கத்தொகையின் முதல் தவணையான ரூ. 2,000-த்தை குளம் தூர்வாரும் பணிக்கு கோவையைச் சேர்ந்த விவசாயி வழங்கிய நிகழ்வு அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : மத்திய அரசு வழங்கியுள்ள சிறு, குறு விவசாயிகளுக்கான கவுரவ ஊக்கத்தொகையின் முதல் தவணையான ரூ. 2,000-த்தை குளம் தூர்வாரும் பணிக்கு கோவையைச் சேர்ந்த விவசாயி வழங்கிய நிகழ்வு அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாடு முழுவதும் உள்ள ஒன்றரை கோடி சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 6,000 கவுரவ ஊக்கத்தொகையாக வழங்குவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, முதற்கட்டமாக, ரூ. 2,000 வழங்கும் திட்டத்தினை நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிலையில், இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்ற கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஊஞ்சப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி வேலுச்சாமி, இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் ரூ. 2,000-க்கான தனது காசோலை மாவட்ட நிர்வாகத்திடம் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் விவசாயி வேலுச்சாமி பேசுகையில், "கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கடும் வறட்சி நிலவிய போது, தங்கள் பகுதியில் உள்ள அச்சன்குளத்தை தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால், அப்போது போதிய நிதி இல்லை என அப்போதைய ஆட்சியர் கூறினார். நீண்ட கால அளவில் விவசாயிகளுக்குப் பலன் அளிக்கக்கூடிய வகையில், அச்சன்குளத்தை உடனடியாக தூர்வார வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, தனக்கு கிடைத்த கவுரவ ஊக்கத்தொகையின் முதல் தவணையை ஆட்சியரிடம் வழங்க முடிவு செய்தேன்," என்றார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...