கோவை : குறவ இன மக்களை இழிவு படுத்தும் விதமாக குறவன் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதால், அதனை தடை செய்ய வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பழங்குடியினர் வீர இளைஞர் பேரவை மாவட்ட தலைவர் மனு அளித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியரிடம், பழங்குடியினர் வீர இளைஞர் பேரவை மாவட்ட தலைவர் ஆனந்தன் மனு ஒன்றை அளித்தார். அதில், ஜெயராமசந்திரன் என்பவரது தயாரிப்பில் குறவன் என்ற தமிழ் திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில், ஜூனியர் எம்.ஜி.ஆர் என்பவர் நடித்து வருகிறார். இந்த படம் தொடர்பான விளம்பரங்கள் முகநூல், வாட்ஸ் அப் மற்றும் இணைய தளங்களில் பார்க்கக் கிடைத்தன.
அதில், இப்படத்தை தயாரிக்கும் நிறுவனம், குறவர்களை ஊசி பாசிகளுடனும், அரைகுறை ஆடைகளுடன் துப்பாக்கி வைத்திருப்பது போலவும் சித்தரித்து உள்ளது. தற்போதைய சூழலில் குறவர் இன மக்கள் படித்து நல்ல நிலைக்கு முன்னேறி வருகின்றனர். முன்னேறி வரும் சமூகத்தை இவ்வாறாகக் காட்சிப்படுத்தும் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும், எனக் கோரப்பட்டிருந்தது.