கோவை : முறைகேடான செயல்களில் ஈடுபடும் பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் மற்றும் பொருளாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சங்க உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

கோவை மாவட்டம், ஒக்கிலிபாளையம் பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்கள் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில், சங்க தலைவர் மற்றும் செயலாளர் முறைகேடான செயல்களில் ஈடுபடுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர்.
அதன் பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- பால் உற்பத்தியாளர் சங்கம், தினமும் 4500 லிட்டர் பாலை விவசாயிகளிடம் கொள்முதல் செய்கிறது. இதுவரையிலும், ஒரு லிட்டருக்கு ரூ.25 வழங்கி வருகிறது. இனிமேல், ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.35 வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், ஒக்கிலிபாளையம் கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் செயலாளர் பினாமிகளை வைத்து பாலில் கலப்படம் செய்து, 200 லிட்டர் வரை மோசடி செய்து பணம் சம்பாதித்து வருகின்றனர். இதனை ஆய்வு மேற்கொள்ளச் சென்ற நிர்வாகிகளை, ஆராய அனுமதிக்காமல் வெளியேற்றியுள்ளனர்.
இந்த விவகாரத்தில், வெளிப்படையான நடவடிக்கைகளை சங்க தலைவர் மற்றும் செயலாளர் மேற்கொள்ள வேண்டும். மேலும், மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.