மலிவு விலை நாப்கின்கள் குறித்த ஆவணப்படத்திற்கு ஆஸ்கார் விருது : கோவை அருணாச்சலம் முருகானந்தத்திற்கு குவியும் பாராட்டுகள்

கோவை : கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம், தயாரித்த மலிவு விலை நாப்கின்களை மையப்படுத்திய 'ப்ரீயட். தி என்ட் ஆஃப் சென்டென்ஸ்' ஆவணப்படம், 2019 ஆஸ்கார் விருதுக்கான குறு ஆவணப்படப் பிரிவில் விருது வென்றுள்ளது.


கோவை : கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம், தயாரித்த மலிவு விலை நாப்கின்களை மையப்படுத்திய 'ப்ரீயட். தி என்ட் ஆஃப் சென்டென்ஸ்' ஆவணப்படம், 2019 ஆஸ்கார் விருதுக்கான குறு ஆவணப்படப் பிரிவில் விருது வென்றுள்ளது. 

திரைத்துறையின் உயரிய விருதான ஆஸ்காரின் 91வது விருது வழங்கும் விழா நேற்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில், பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டது. அதில், இந்திய பெண்கள் குறித்து எடுக்கப்பட்ட ப்ரீயட். தி என்ட் ஆஃப் சென்டென்ஸ் சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதினை வென்றுள்ளது. 

இந்த படம், கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம், ஏழைப் பெண்களுக்காகத் தயாரித்த மலிவு விலை நாப்கின்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இதில், இந்திய பெண்கள் மற்றும் அவர்கள் மாதவிடாய் காலங்களில் சந்திக்கும் பிரச்சினைகளே அடிப்படை கதைக்கருவாகும். 2018ம் ஆண்டு ஏப்ரல் 5 ம் தேதி வெளியிடப்பட்ட இந்த படத்தை ராக்யா செக்தாப்சி இயக்கி இருந்தார். முன்னதாக, பாலிவுட் இயக்குநர் பால்கி இவரது கதையை மையப்படுத்தி பேட்மேன் என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அருணாச்சலம், கிராமத்திலும், வீட்டிலும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் என்ன விதமான துன்பங்களை அனுபவிக்கிறார்கள், சுகாதாரமற்ற வழிமுறைகளைப் பயன்படுத்துகிறார்கள், மூடநம்பிக்கைகளில் இருக்கிறார்கள் என்பதைப் பார்த்து தான் மலிவு விலையில் நாப்கின்களை தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார். 

இதையடுத்து, மிகக் குறைந்த விலையில் நாப்கின் தயாரிக்கும் எந்திரத்தை உருவாக்கி, நாப்கின் தயாரித்து வழங்கி வருகிறார். இவர் உருவாக்கிய எந்திரத்தைப் பயன்படுத்தி இன்று பல்வேறு கிராமங்களில் பெண்கள் நாப்கின்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்து சம்பாதித்து வருகின்றனர். இவரின் சேவையையும், சாதனையையும் பாராட்டி மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது. இந்நிலையில், இவரின் கதையைப் பின்னணியாகக் கொண்ட ஆவணப்படமும் ஆஸ்காரை வென்று, இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...