நீலகிரி : நீலகிரியில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நிதி வழங்குவதின் முதல் கட்டமாக, 19 நபர்களுக்கு நிதியுதவிக்கான ஆணை வழங்கப்பட்டது.

சிறு மற்றும் குறு விவசாயிகளின் வருமானத்தை அதிகப்படுத்தும் நோக்கில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி, நாட்டில் உள்ள சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் சொந்தமாக இரண்டு ஹெக்டர் வரை அரசு ஆவணங்களின்படி விவசாய பூமி வைத்துள்ள விவசாய குடும்பத்திற்கு ஒரு ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் மூன்று தவணைகளாக ரூ2 ஆயிரமாக பிரித்து வழங்கப்படவுள்ளது. இந்நிலையில், 2018-19 நிதியாண்டிற்கான முதல் தவணைத்தொகை, அதாவது கடந்த டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான தவணைத்தொகை ரூ.2,000 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
மேலும், இத்திட்டத்தின் தொடக்கமாக சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு முதல் கட்ட நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி, பிரதம மந்திரியால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின், நேரடி ஒளிபரப்பு நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியினை, நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் ஆகியோர் தொடக்கி வைத்தனர். இதையடுத்து, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நிதி வழங்குவதின் முதல்கட்டமாக, 19 நபர்களுக்கு நிதியுதவிக்கான ஆணையினை வழங்கினர்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் தோட்டக்கலைத் துறை மற்றும் இதர துறைகளின் மூலம் மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்கள் பற்றி பதாகைகள் மற்றும் செயல் விளக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. குறிப்பாக, காய்கறி விவசாயத்தில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.