நீலகிரி : நேற்று கோவையிலிருந்து உதகைக்கு சுற்றுலா வந்த வேன் விபத்திற்குள்ளானதில், இருவர் படுகாயம் மற்றும் மீதமுள்ளவர்களுக்கு லேசானே காயம் ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில், தனியார் சூட்கேஷ் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்யும் தொழிலாளிகள் 20 பேர், உதகைக்கு சுற்றுலா வந்துள்ளனர். கேளிக்கைகள் முடிந்து மாலை திரும்பிய போது குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கே.என்.ஆர் பகுதியில் வேன் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்துள்ளது.
எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 20 பேரில் முகமது அனாஸ் (16), மற்றும் சதாம் (27) ஆகியோருக்கு கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. மீதமுள்ளவர்கள் லேசான காயமடைந்தனர். இதையடுத்து, அனைவரும் குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், வேன் ஓட்டுநர் சரவணகுமாரிடம் நடைபெற்ற விசாரணையில், "சுற்றுலா வந்த அனைவரும் கோவையில் தங்கி பணிபுரியும் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்," என தெரிய வந்துள்ளது.