கோவை : சிங்காநல்லூர் அருகே முன்னாள் காவல் உதவி ஆய்வாளரை, அவரது மகனே கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கோவை சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான இருகூர் அருகே உள்ளது அண்ணா நகர். இந்த பகுதியில் கடந்த சில வருடங்களாக சுப்பிரமணியம்(70), அவரது மனைவி பத்மினி மற்றும் அவரது மகன் செந்தில் குமார் ஆகியோர் வசித்து வருகின்றனர். இதில், சுப்பிரமணியம் கடந்த 2006ம் ஆண்டு சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் அவரது மகன் செந்தில் குமாருக்கு திருமணம் நடந்து, பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால், செந்தில்குமார் தன் பெற்றோருடன் வசித்து வந்தார். மேலும், விரக்தியில் வாழ்ந்து வந்த செந்தில் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்குச் செல்வது வழக்கம். இதனால், தந்தைக்கும், மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், செந்திலின் தாய் பத்மினி நேற்று வெளியே சென்று இருந்தார். அப்போது, வீட்டிலிருந்த தந்தைக்கும் மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த மகன் செந்தில்குமார் தனது தந்தை சுப்பிரமணியத்தை கத்தியால் குத்திக் கொன்றார். இதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, செந்தில்குமார் தப்பி ஓடி விட்டார். அதன் பின்னர் வீட்டிற்கு வந்த பத்மினி, தனது கணவன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் மூலம் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். மேலும், கொலை சம்பவம் தொடர்பாக செந்தில் குமாரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பெற்ற மகனே தந்தையை கொன்ற விவகாரம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.