"ஸ்டாலின் நடத்தும் கிராம சபா நாடகம் கைகொடுக்காது", அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சாடல்


கோவை : அ.தி.மு.க., பா.ம.க. மற்றும் பா.ஜ.க., கூட்டணி இயற்கையாக அமைந்ததாகவும், இது வெற்றி கூட்டணி என்றும் கோவையில் நடந்த நலத்திட்ட வழங்கும் விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவை மாவட்ட அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

பின்னர், அவர் பேசியதாவது :-  தலைவர்கள் பிறந்தநாளில் தி.மு.க.,வினர் பொதுமக்களிடம் வசூல் செய்வார்கள். அ.தி.மு.க.,வினர்தான் பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்குவார்கள். கட்சியையும், ஆட்சியையும் முதலமைச்சர் எடப்பாடி மற்றும் துணை முதலமைச்சர் சிறப்பாக  நடத்தி வருகின்றனர். இந்த 

ஆட்சியை கலைக்க தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முயற்சித்து வருகிறார். தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலினின் கிராம சபா கூட்டம் என்பது வெறும் டிராமா. தேர்தலுக்காக ஸ்டாலின் கிராமங்களுக்கு செல்கிறார். மேலும், ஸ்டாலினின் ஒரே கொள்கை முதலமைச்சர் நாற்காலியில் அமர்வது தான். அது எக்காலத்திலும் நடக்காது. 

அ.தி.மு.க., பா.ம.க. மற்றும் பா.ஜ.க., கூட்டணி இயற்கையாக அமைந்தது. நல்லது செய்தால் நல்லது நடக்கும். உயிரைக் கொடுத்து ஜெயலலிதா ஆட்சியை கொடுத்துள்ளார். மேலும், அ.தி.மு.க., கூட்டணி நல்ல கூட்டணி, அருமையான கூட்டணி, வெற்றி கூட்டணி. இந்த கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டார்கள். 40 தொகுதியிலும் அ.தி.மு.க., கூட்டணி வெல்லும். அ.தி.மு.க.,வின் இந்த கூட்டணியை பார்த்து ஸ்டாலின் பயப்படுகிறார். வைகோ ஸ்டாலினை விமர்சித்ததை விட, வேறு யாரும் விமர்சித்திருக்க முடியாது. இந்த வெற்றி கூட்டணியைப் பொறுத்து கொள்ள முடியாமல் பா.ம.க.,வை ஸ்டாலின் விமர்சித்து வருகிறார், இவ்வாறு அமைச்சர் எஸ்.பி., வேலுமணி கூறினார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...