மருதமலை வனப்பகுதியில் பரவிய காட்டுத்தீ போராடி அணைப்பு : வனத்துறையினருடன் கைகோர்த்து பணியாற்றிய பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள்

மருதமலை அருகே உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு பின்புறம் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் இன்று மதியம் 1 மணியளவில் காட்டுத்தீ ஏற்பட்டது

கோவை : மருதமலை அருகே உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட திடீர் காட்டுத்தீயை வனத்துறையினருடன் பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்களும் இணைந்து போராடி அணைத்தனர்.



மருதமலை அருகே உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு பின்புறம் உள்ள 

மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் இன்று மதியம் 1 மணியளவில் காட்டுத்தீ ஏற்பட்டது. இது படிப்படியாக பிற பகுதிகளுக்கும் பரவியது. இதைக்கண்ட பொதுமக்கள், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த வன ஊழியர்கள் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களுடன் பொதுமக்களும், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த உறுப்பினர்களும் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடினர்.

பின்னர், 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, காட்டுத்தீ பட்டா நிலங்களுக்கு பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. வனத்துறையினருடன் பொதுமக்களும், தொண்டு நிறுவனங்களும் இணைந்து தீயை அணைத்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.



இதேபோல, மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட கோவைப்புதூர் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை வனத்துறையினர் அமைக்கப் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...