சென்னை : சென்னை போரூர் அருகே தனியார் கால்டாக்ஸி நிறுவனத்தின் பார்க்கிங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்தன.

போரூர் அருகே தனியார் வாடகை கார்கள் நிறுத்துமிடத்தில் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கார்களில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் 4-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கார்களில் பற்றி எரியும் தீயை, தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். கார்களில் பிடித்த தீ காரணமாக அந்த பகுதியில் ஏற்பட்ட புகையால், அங்கு உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாயினர். இந்த தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் கருகி சேதமாகின.
பெங்களூருவில் விமான கண்காட்சி கார் பார்க்கிங்கில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 300 கார்கள் தீயில் எரிந்து நாசமானது குறிப்பிடத்தக்கது.