துடியலூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியில் 691 பெண்களுக்கு மானிய விலையிலான இருசக்கர வாகனம் விநியோகம்

கோவை : துடியலூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியில் ரூ. 1.72 கோடி மதிப்பீட்டில் 691 உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

கோவை : துடியலூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியில் ரூ. 1.72 கோடி மதிப்பீட்டில் 691 உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். 



கோயம்புத்தூர் மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துடியலூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியில் மகளிர் திட்டத்தின் மூலம் இன்று அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, 691 உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனத்தை வழங்கினார். 

பின்னர், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது :-தொலைநோக்கு பார்வை கொண்ட ஜெயலலிதா, பெண்கள் தங்களது பணியிடங்களுக்கு செல்வதில் உள்ள சிரமங்களை உணர்ந்து இந்திய திருநாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில் மகளிர் பணியிடங்களுக்கும், பிற வேலைகளுக்கும் எளிதில் செல்லும் வகையில் இருசக்கர வாகனங்கள் வாங்க 50 சதவிகித மானியம் வழங்கும் இந்த முன்னோடி திட்டத்தினை தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தார். அதன்படி, மாநிலம் முழுவதும் முதலமைச்சர் உத்தரவின்படி, அம்மா இருசக்கரவாகனம் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் 50 சதவிகித மானியம் அல்லது ரூ.25,000 இவற்றில் எது குறைவோ அத்தொகை இத்திட்டத்தின் கீழ் மானியமாக வழங்கப்படுகிறது. அமைப்பு மற்றும் அமைப்பு சாரா நிறுவனங்களில் பதிவு செய்த பெண்கள், அரசு திட்டங்களில் பணியாற்றும் பெண்கள், தனியார் நிறுவனங்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்கள் மற்றும் கிராமப்புறங்களில் விவசாயம் மற்றும் விவசாயம் சாராத துறைகளில் சுயதொழில் செய்யும் உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்பட்டு வருகிறது.

இதேபோல, தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் பெண் முன்னேற்றத்தினை நோக்கமாக கொண்டதாகவும், பெண்களும் ஆண்களுக்கு நிகர் என்ற சூழ்நிலையை உருவாக்கும் நோக்கிலும் செயல்படுத்தப்படுகின்றது. மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின்கீழ் மானியம் பெற 18 முதல் 40 வயது வரையில் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள, ஆண்டுக்கு ரூ. 2.50 இலட்சத்திற்குள் வருமானம் ஈட்டக் கூடிய பெண்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக, மிகவும் பின்தங்கிய பகுதிகள், மலைப்பகுதியில் வாழும் பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கணவனை இழந்தோர் மற்றும் சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ஊரக பகுதியில் உழைக்கும் மகளிருக்கு 50 % மானியத்தில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வட்டார வாரியாக பெறப்பட்டுள்ளது. அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வட்டார அளவிலான ஊராட்சி செயலாளர், கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு செயலாளர்களைக் கொண்டு கள ஆய்வு செய்து, மண்டல அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு உரிய நிபந்தனைகளுக்குட்பட்டு முன்னுரிமை அடிப்படையில் மாவட்ட அளவிலான தேர்வுக்குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு மானியம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஒரு இலட்சம் உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் கோவை மாவட்டத்தில், 4,949 மகளிருக்கு வாகனம் வழங்குவதற்குரிய நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 2,676 மகளிருக்கு இதுவரை மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது அதன்படி, இன்று கவுண்டன்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துடியலூரில் 421 உழைக்கும் மகளிருக்கு ரூ.1,05,01,341 மதிப்பீட்டிலும், மேட்டுப்பாளையத்தில் 270 உழைக்கும் மகளிருக்கு ரூ.67,14,730 மதிப்பீட்டிலும் என மொத்தம் 691 மகளிருக்கு ரூ. 1,72,16,071 மானியத்தில் விலையில்லா அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, மேட்டுப்பாளைத்தில் ரூ.89,14,545 மதிப்புடைய 41 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப்பட்டாக்களும், ரூ. 4,08,000 மதிப்புடைய 34 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையும், ரூ. 48,000 மதிப்புடைய 4 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகைக்கான காசோலைகளும், ரூ. 84,000 மதிப்புடைய 7 பயனாளிகளுக்கு விதவை உதவித்தொகைக்கான காசோலைகளும், ரூ. 70,000 மதிப்புடைய 4 பயனாளிகளுக்கு முதலமைச்சர்

உழவர் பாதுகாப்புத்திடடத்திற்கான காசோலைகள் என மொத்தம் ரூ.95,24,545 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது, இவ்வாறு தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி, மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.ஆறுக்குட்டி, ஓ.கே.சின்னராஜ், பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன்.கே.அர்ச்சுனன், மாநகராட்சி ஆணையாளர் ஜே.ஷ்ரவன் குமார் ஜடாவத், மகளிர் திட்ட இயக்குநர் செல்வராசு மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...