பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைத்தாலும் அ.தி.மு.க.,வின் கொள்கைப்படி சிறுபான்மையினரின் நலன் காப்போம் : அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கோவை : பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைத்தாலும் அ.தி.மு.க.,வின் கொள்கைப்படி என்றும் சிறுபான்மையினரின் நலன் காப்போம் என மேட்டுப்பாளையத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.


கோவை : பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைத்தாலும் அ.தி.மு.க.,வின் கொள்கைப்படி என்றும் சிறுபான்மையினரின் நலன் காப்போம் என மேட்டுப்பாளையத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் அரசு விழா மற்றும் அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாள் நாள் விழா நடைபெற்றது. முன்னதாக, அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று மகளிருக்கான மானிய விலை ஸ்கூட்டரினை அமைச்சர் வேலுமனி வழங்கினார். பின்னர், கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க., அம்மா பேரவை சார்பில் சிவரஞ்சனி தியேட்டர் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10,000 பேருக்கு அ.தி.மு.க சார்பில், தையல் இயந்திரம், வேட்டி சேலைகள், சலவை பெட்டி உள்ளிட்ட பொருட்களை நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். 



இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியாவது :- அ.தி.மு.க., ஒரு கொள்கை பிடிப்பான மதச்சார்பற்ற கட்சியாகும். அ.தி.மு.க., கொள்கைப்படி, மத்தியில் ஆட்சியில் இருப்போருடன் இணக்கமாக இருந்து, மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்திற்கு பெற்று தரும் நோக்கத்திலேயே தற்போது பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைத்துள்ளளோம். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா காட்டிய அ.தி.மு.க.,வின் கொள்கைப்படி என்றும் சிறுபான்மையினரின் நலன் காப்போம். எதற்காகவும் இதனை விட்டு கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை. இதற்காக யாரும் அச்சப்படவும் தேவை இல்லை. 

மேலும், பல ஆண்டுகள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த தி.மு.க., தமிழகத்திற்கு எந்த நன்மையையும் செய்யவில்லை. தி.மு.க., தலைமையிலான எதிர் அணியினர் தங்களது பிரதமர் வேட்பாளர் யார் என்றே உறுதியாக கூற முடியாத நிலையிலேயே உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெறும், இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியில் மாநிலங்களை உறுப்பினர் ஏ.கே செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஓ.கே சின்னராஜ், பி.ஆர்.ஜி. அருண்குமார் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...