முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு தீ வைத்தவர்கள் குறித்து துப்பு கொடுத்தால் ரூ. 10,000 பரிசு : வனத்துறை அறிவிப்பு

நீலகிரி : முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு தீ வைத்தவர்கள் குறித்து துப்பு கொடுத்தால் ரூ. 10,000 பரிசு வழங்கப்படும் என வெளி மண்டல துணை இயக்குநர் புஸ்பாகரன் அறிவித்துள்ளார்.


நீலகிரி : முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு தீ வைத்தவர்கள் குறித்து துப்பு கொடுத்தால் ரூ. 10,000 பரிசு வழங்கப்படும் என வெளி மண்டல துணை இயக்குநர் புஸ்பாகரன் அறிவித்துள்ளார்.



முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதியில் நேற்று மதியம் ஏற்பட்ட காட்டு தீ, நள்ளிரவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. வனப்பகுதியில் உள்ள மரங்கள் மற்றும் சாய்ந்து கிடக்கும் மரக் கட்டைகளில் பற்றியுள்ள நெருப்பை தண்ணீர் ஊற்றி அணைக்கும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பக வனப்பகுதில் 90 % காட்டுத் தீ கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. சுமார் 150 வனத்துறையினர் தீயை முழுமையாக கட்டுபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதிக்கு தீ வைத்தவர்கள் குறித்து துப்பு கொடுத்தால் ரூ. 10,000 பரிசு வழங்கப்படும் என வெளி மண்டல துணை இயக்குநர் புஸ்பாகரன் அறிவித்துள்ளார். நேற்று ஒரே நாளில் மட்டும் முதுமலை வனப்பகுதியில் 5 இடங்களில் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இது தொடர்பாக, வனத்துறையினர் தனி குழு அமைத்து விசாரணை நடத்தி வருவதாகவும், வனப்பகுதிக்கு தீ வைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...