திருப்பூர் : காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகைக்காக அபராதமாக பிடித்தம் செய்யப்பட்ட பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என திருப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்தியமைச்சர் ப. சிதம்பரம் உறுதியளித்துள்ளார்.

திருப்பூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் பா.ஜ.க. அரசை கண்டித்து பொதுக்கூட்டம் திருப்பூர் ராயபுரம் பகுதியில் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:- வருகின்ற தேர்தலில் நாம் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். காந்தியடிகள் கனவு கண்ட இந்தியா, அம்பேத்கார் உருவாக்கிய அரசியல் சாசன இந்தியா, நேரு கற்பனை கண்ட இந்தியா, வல்லபாய் படேல் ஒற்றுமைப்படுத்திய இந்தியா என 71 ஆண்டுகாலமாக ஒரே யுகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த தேர்தலில் நாம் வெற்றிபெற்றால் இந்த யுகம் தொடரும் , நாம் தோல்வியடைந்தால், இந்த யுகம் தோல்வியடையும். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு அளிப்பதாக பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால், புள்ளிவிவரத்தின்படி கடந்த நான்கரை ஆண்டில் 45 வருடங்கள் இல்லாத அளவாக 6.1 சதவிகித வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக ஆக்குவதாக தெரிவித்த அவர்,கடந்த நான்கரை ஆண்டுகளில் ஒன்றும் செய்யாமல் ரூ. 6,000 உதவித்தொகை அறிவித்து நாளை முதற்கட்டமாக இரண்டாயிரம் என லஞ்சமாக வழங்கவிருக்கிறார்.
தமிழகத்தில் ஊழல் சொல்லப்பட்டதும், அதனை சொல்லியவர்களுமான அ.தி.மு.க., - பா.ம.க., கூட்டணி ஊழல் கூட்டணி. பா.ம.க., அ.தி.மு.க., அரசின் மீது அளித்த 206 பக்க ஊழல் பட்டியலை இனி ஒவ்வொரு தொகுதியாக வாசிப்போம். ஆனால், தி.மு.க., காங்கிரஸ் கட்சி கூட்டணி என்பது 1971 ஆம் ஆண்டு இந்திரா காந்தி, கலைஞரால் ஏற்படுத்தப்பட்ட கூட்டணி. மதச்சார்பின்மை, மொழிப்பற்று, இட ஒதுக்கீடு என ஒத்த கருத்துடன் இணைந்த கூட்டணியாகும். இந்தாண்டு தேர்தல் திருவிழாவில் நாம் சிந்திக்க வேண்டும். மீண்டும் சர்வதிகார ஆட்சி அமைந்திட கூடாது. மீண்டும் பா.ஜ.க., ஆட்சிக்கு வந்தால் காந்தியால் வளர்க்கப்பட்ட யுகம், அம்பேத்காரால் அமைக்கப்பட்ட அரசியல் சாசனம் அழிக்கப்பட்டுவிடக்கூடும் என்பதால், சிந்தித்து வாக்களிக்க வேண்டும், இவ்வாறு பேசினார்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

இதனிடையே, நான் திருப்பூர் வருவதை அறிந்த மோடி என்னிடம் மாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் திருப்பூர் வந்த போது சொல்ல மறந்து விட்டதாகவும், அதை உங்களிடம் சொல்லச்சொன்னார் என சிதம்பரம் கூறினார். "நேற்று சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை, வரும் திங்கட்கிழமை உங்கள் அனைவருக்கும் ரூ. 15 லட்சம் பணம் வங்கி கணக்கில் செலுத்துவதாக" தெரிவித்தார். இவ்வாறு கிண்டலாக பேசினார்.