திருப்பூர் தொழில் துறையினரை நடுங்க வைக்கும் போலி வருமான வரித்துறை அதிகாரி : நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

திருப்பூர் : பிரபல நிறுவனங்களை குறிவைத்து, வருமான வரித்துறையினர் என அறிமுகப்படுத்தி, பண மோசடியில் ஈடுபடும் நபரைக் கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என போலீசாருக்கு திருப்பூர் தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் : பிரபல நிறுவனங்களை குறிவைத்து, வருமான வரித்துறையினர் என அறிமுகப்படுத்தி, பண மோசடியில் ஈடுபடும் நபரைக் கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என போலீசாருக்கு திருப்பூர் தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 



பின்னலாடை நகரம் என அழைக்கப்படும் திருப்பூரில் 5,000-க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதற்கு தேவையான பிரிண்டிங், டையிங், எம்ராய்டிங் என பல்வேறு சார்பு நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. இந்நிறுவனங்களில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் ஆண்டுக்கு ரூ. 26 ஆயிரம் கோடி மற்றும் உள்நாட்டு வர்த்தகம் ரூ. 18 ஆயிரம் கோடி என்ற அளவில் நடைபெற்று வருகிறது. 



இந்த நிலையில், சமீப காலமாக வருமான வரித்துறையினரின் சோதனை என்ற பெயரில் பல லட்ச ரூபாய் தொழிலதிபர்களிடம் மோசடி நடைபெற்றுள்ளது. 

திருப்பூரில் பட்டய கணக்காளராக இருந்து வரும் பாலாஜி என்பவர் பல தனியார் பின்னலாடை நிறுவனங்களுக்கு கணக்காளராக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், ஒரு பின்னலாடை நிறுவனத்திற்கு மனோகரன் என்பவர் அழைத்து உங்கள் நிறுவனத்திற்கு வருமான வரித்துறை சோதனை மேற்கொள்ள உள்ளதாகவும், அதிகாரிகளுக்குப் பணம் கொடுத்தால் சோதனை நடத்தப்படாது என்று தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த நிறுவனத்தினர், கணக்காளர் பாலாஜிக்கு அழைத்துள்ளனர்.

வருமான வரித்துறையினர் சோதனை என்பது மிகவும் ரகசியமாக நடக்கும் நிலையில், முன்னதாக அழைத்து பேசியதால் சந்தேகமடைந்த கணக்காளர் பாலாஜி உடனடியாக அந்த எண்ணுக்கு அழைத்து பேசியுள்ளார். ஆனால், எதிர்முனையில் பேசிய மனோகரன் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். இதைத் தொடர்ந்து, வருமான வரித்துறை அலுவலகத்திலும் மனோகரன் என்பவர் குறித்து விசாரித்துள்ளார். அதில், போலியான நபர்கள் பணம் பறிக்கும் நோக்கில் பின்னலாடை அதிபர்களை அழைத்துப் பேசி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், பல தொழிலதிபர்களுக்கும் இதே போல மிரட்டல் விடுக்கப்பட்டதும் பலர் பணம் கொடுத்து ஏமாந்ததும் தெரியவந்தது. 

இது குறித்து மீண்டும் அந்த எண்ணுக்கு அழைத்து பேசியதில், மனோகரன் என்ற அந்த நபர், தான் ஒரு இன்பார்மர் என்றும், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் இருக்கும் தான், கடந்த 3 ஆண்டுகளாக பணியில் உள்ளதாகவும் கூறியுள்ளார். எனவே, தன்னை மன்னித்து விடுங்கள் என்றும், இதனை செய்தியாக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார். 

இதேபோல, வருமான வரித்துறைக்கு தகவல் அளிப்பவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் நபர்கள், பிரபலமாக உள்ள நிறுவனங்களின் எண்ணை சேகரித்து, அவர்களை மிரட்டி பணம் வசூலித்து வருவது இதன் மூலம் தெரியவந்துள்ளது. மேலும், தொழில்துறையினர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க தயங்குவதால், இதுபோன்ற மிரட்டல் நபர்கள், தொடர்ந்து பணம் வசூலிக்க ஏதுவாக அமைந்துள்ளது. காவல் துறையினர் இது போன்ற மிரட்டல் நபர்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தொழில் துறையினரின் கோரிக்கையாக உள்ளது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...