கோவை : கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே காட்டுத்தீ ஏற்பட்டிருப்பது பெரும் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாலை கர்நாடக மாநில எல்லையான பந்திப்பூர் புலிகள் வனக் காப்பகத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ, படிப்படியாகக் கோவை மாவட்ட வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளுக்கும் பரவியது. மதுக்கரை மற்றும்போளுவாம்பட்டி ஆகிய வனச்சரக பகுதிகளில் மாலை காட்டுத் தீ கொளுந்துவிட்டு எரிந்தது. இதையடுத்து, வனத்துறை ஊழியர்கள் தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, கோவைபுதூர் வனப் பகுதியை ஒட்டியுள்ள பட்டா நிலத்தில் இருந்த காய்ந்த புற்களில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இது அருகே உள்ள மதுக்கரை வனப்பகுதிக்கும் வேகமாக பரவியது. இது குறித்து தகவலறிந்த வனத்துறை ஊழியர்கள் தீயினை அணைத்து வருகின்றனர்.
"எங்களது வனத்துறை ஊழியர்கள் வனப்பகுதியில் காட்டுத் தீ பரவியுள்ள பகுதிகளை ஆராய்ந்து வருகின்றனர். கோடை காலத்திற்கு முன்னதாகவே காட்டுத் தீ பரவியுள்ளது," என்கின்றனர் வனத்துறை மூத்த அதிகாரிகள்.
அதேவேளையில், பந்திப்பூரில் இன்று அதிகாலை தொடங்கிய காட்டுத் தீ, தற்போது முதுமலை புலிகள் வனக்காப்பகத்திற்கு சொந்தமான பகுதிகளுக்கும் பரவியுள்ளது.