Exclusive: கல்லாறு பகுதியில் பறவைகள், பட்டாம்பூச்சிகள் குறித்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளக்க நிகழ்ச்சி

Exclusive: கல்லாறு பகுதியில் பறவைகள், பட்டாம்பூச்சிகள் குறித்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளக்க நிகழ்ச்சி

கோவை : மேட்டுப்பாளையத்தை அடுத்த கல்லாறு வனப்பகுதியில் பறவைகள், பட்டாம்பூச்சிகள் பற்றி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ஒருநாள் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. 



கோவையில் அம்ரித் சென்டர் என்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான மையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள 26 மாணவர்கள், உலக இயற்கை நிதியம் அமைப்பின் சார்பில் மேட்டுப்பாளையத்தை அடுத்த கல்லாறு தோட்டக்கலைத்துறை பண்ணைக்கு சுற்றுச்சூழல் சுற்றுலாவிற்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களை உலக இயற்கை நிதியம் அமைப்பின் சுற்றுச்சூழல் கல்வியின் ஒருங்கிணைப்பாளர் எஸ். சரவணன் மற்றும் இறகுகள் அமைப்பைச் சேர்ந்த என். ரவீந்திரன் வழிநடத்தினர். அங்கு அவர்களுக்குப் பறவைகளை எவ்வாறு அடையாளம் காண்பது மற்றும் பறவைகளின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், மரங்கள், பட்டாம்பூச்சிகள் ஆகியவற்றின் இன்றியமையாத அவசியம் பற்றியும் விளக்கப்பட்டது. 



பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகள் இயற்கை அறிகுறிகளை அளிக்கும் முக்கிய காரணிகள் என்றும், இதைப் பற்றி மாணவர்கள் அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகும் என உலக இயற்கை நிதியம் அமைப்பின் சுற்றுச்சூழல் கல்வியின் ஒருங்கிணைப்பாளர் எஸ். சரவணன் தெரிவித்தார். 

"கல்லாறு பகுதியானது, நதிகள் கடந்து செல்லும் சிறந்த பாதைகளைக் கொண்டுள்ளது. மேலும், இங்கு பல்வேறு விதமான பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகள் உள்ளன. அதேவேளையில், குழந்தைகள் சுற்றுச்சூழல் குறித்து அறிந்து கொள்வதற்கு சிறந்த தளமாகவும் கல்லாறு அமைந்துள்ளது. மேலும், இங்கு பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகளைக் கண்டு மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைகின்றனர்," என்றார் சுற்றுச்சூழல் கல்வியின் ஒருங்கிணைப்பாளர் எஸ். சரவணன். 



 

மேலும், இந்தப் பயணத்தின் போது அழகிய நினைவுகளையும், சுற்றுச்சூழல் குறித்த தகவல்களை மாணவர்கள் பெற்றுக்கொண்டதாக, அவர்களுடன் வந்திருந்த ஆசிரியர்கள் தெரிவித்தனர். 

"பொதுவாக, மாற்றுத்திறனாளி குழந்தைகள் அவர்களது வீடுகள் மற்றும் பள்ளிகளைத் தவிர வேறு எங்கும் செல்ல முடியாத நிலை இருக்கும். அப்படியிருக்க, பிறருடன் நெருங்கிப் பழக, இதுபோன்ற சிறந்த தருணங்களை ஏற்படுத்தி தருவது, அவர்களின் வாழ்க்கைக்குக் கூடுதல் மருந்தாக உள்ளது," என்கிறார் பள்ளி ஆசிரியர் வி. வள்ளிராணி. அதேபோல, இயற்கைச் சூழல் நிறைந்த பகுதிகளுக்கு மாணவர்களை அழைத்து வருவதன் மூலம், சமூகத்தின் மீதான அக்கறை அவர்களுக்கு உருவாகும் என மற்றொரு ஆசிரியர் வி. திலகவதி தெரிவித்தார். 

இதனிடையே, மீண்டும் மீண்டும் இந்த இடத்திற்கு திரும்பி வர வேண்டும் மாற்றுத்திறனாளி மாணவன் தீபக் கூறியது, சக மாணவர்களின் எண்ணங்களையும் பிரதிபலிப்பதாக இருந்தது. 

உலக இயற்கை நிதியம் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் இந்த நிகழ்ச்சியில், இதுவரை கோவை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 500-க்கும் மாணவர்கள் பயன்பெற்றுள்ளதாக உலக இயற்கை நிதியம் அமைப்பின் சுற்றுச்சூழல் கல்வியின் ஒருங்கிணைப்பாளர் எஸ். சரவணன் தெரிவித்தார். 

"இன்றைய காலகட்டத்தில் பள்ளி வகுப்பறைகளில் சுற்றுச்சூழல் கல்வி குறித்த கோட்பாடுகள் பெரிதளவில் கற்பிக்கப்படுகின்றன. ஆனால், இது 4 சுவர்களுக்கு வெளியே கற்றுக் கொடுக்க வேண்டும். இதுபோன்ற நிகழ்ச்சிகள் மாணவர்களுக்குப் பெரிதும் உதவிகரமாக இருக்கும்," என சுற்றுச்சூழல் கல்வியின் ஒருங்கிணைப்பாளர் எஸ். சரவணன் கூறினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...