கோவை : கோவையில் இயங்கி வரும் காருண்யா கல்வி நிறுவனத்தின் மகளிர் விடுதியிலிருந்து வெளியேறும் கழிநீர், அப்பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றின் கிளை வாய்க்காலில் வெளியேற்றப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சிறுவானி சாலையில் அமைந்துள்ளது காருண்யா மகளிர் விடுதி. இங்குள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை, விடுதி நிர்வாகத்தினர் சாப்பாணிமடை வழியாகச் செல்லும் நொய்யலின் கிளை வாய்க்காலில் கலந்து மாசுபடுத்துவது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு வாசிகள் கூறியதாவது ;- பொதுமக்கள் சார்பில் பலமுறை எச்சரித்தும், விடுதி நிர்வாகத்தினர் கழிவுநீரை தொடர்ந்து வாய்க்காலில் வெளியேற்றி வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் அதிக அளவிலான கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், நொய்யல் நதி மாசுபடுவதோடு, வாய்க்காலில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் கழிவுநீரால் இப்பகுதியில் கொசுத் தொல்லை அதிகரித்து, சுகாதாரமற்ற சூழல் உருவாகியுள்ளது, என்றனர்.
தொடர்ந்து வெளியேற்றப்படும் கழிவுநீரின் தாக்கத்தால், இப்பகுதியை கடக்கும் நொய்யல் நதியின் கிளை வாய்க்கால் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. விடுதியின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் ரசாயனம் நிறைந்த கழிவு நீர், நிலத்தில் படிவதால் மண்ணின் தன்மையும், நிலத்தடி நீரும் அதிக அளவு மாசுபட்டுள்ளன என சமீபத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

மேலும், மழைபெய்யும் காலங்களில் வாய்க்காலில் வரும் நீர் விவசாயத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், தற்போது இந்த வாய்க்கால் சாக்கடை போல் மாற்றப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
குறிப்பாக, சாக்கடையாய் மாறிவரும் இந்த வாய்க்காலை நோக்கியே அவ்வப்போது யானைகளும், காட்டுப் பன்றிகளும் தண்ணீர் தேடி வருகின்றன. இந்நிலையில், விலங்குகள் கழிவுநீரைக் குடிக்கும் பட்சத்தில் அவற்றுக்கும் பாதிப்புகள் ஏற்படும் என வனவிலங்கு ஆர்வலர்களும் கவலை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, காருண்யா பல்கலைக்கழக நிர்வாகத்தினரைத் தொடர்பு கொண்டபோது பதில் ஏதும் வரவில்லை.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க கற்றுத்தர வேண்டிய, கல்வி நிலையமே நீர் ஆதாரத்தை மாசுபடுத்துகிறது என்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கழிவுநீர் பாதையை மாற்றி அமைப்பதோடு, நொய்யல் நதியை மாசுபடுத்தும் விடுதி நிர்வாகத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.