என்.டி.ஏ தலைமையில் தான் கூட்டணி, அதிமுக தலைமையில் இல்லை : துணைமுதல்வரிடம் அமித் ஷா கண்டிப்பு

தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் அதிமுக இடம் பெற்றுள்ளது என துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் அதிமுக இடம் பெற்றுள்ளது என துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களவைத் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன. இந்தக் கூட்டணியில் பாஜகவுக்கு மிகக்குறைவாக 5 இடங்கள் மட்டுமே ஒதுக்கிய அதிமுக, பாமகவுக்கு அதைக்காட்டிலும் அதிகமாக ஒதுக்கியது. இதனால், தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைந்துள்ளதாகப் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா நேற்று மதுரை வந்திருந்தார். 

"தமிழகத்தில் பாஜகவுக்கு மிகக்குறைவாக 5 தொகுதிகள் கொடுக்கப்பட்டு இருந்தாலும், தமிழகத்தில் அதிமுக கூட்டணிக்கு தலைமை வகித்தாலும், அதிமுக தலைமையிலான கூட்டணி என்று அழைக்க முடியாது, "என அமித் ஷா அதிமுக தலைவர்களிடம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.

மேலும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் நேற்று சந்தித்துப் பேசிய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, "இப்போதிருந்து தமிழகத்தில் ஒவ்வொரு நிகழ்ச்சியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நிகழ்ச்சியாகவே இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

 அப்போது உடன் இருந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இதை தமிழில் அனைத்து தலைவர்களுக்கும் தெரிவித்தார். இது தொடர்பான தலைவர்களுக்கு இடையிலான உரையாடல் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...