பெங்களூரூவில் விமான கண்காட்சியின் கார் பார்க்கிங்கில் பயங்கர தீவிபத்து : 100-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து சேதம்

கர்நாடகா : பெங்களூரூவில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியின் கார் பார்க்கிங் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில், 100-க்கும் மேற்பட்ட கார்கள் சேதம் அடைந்தன.

கர்நாடகா : பெங்களூரூவில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியின் கார் பார்க்கிங் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில், 100-க்கும் மேற்பட்ட கார்கள் சேதம் அடைந்தன.



பெங்களூரூ சர்வதேச விமான கண்காட்சி கடந்த 20-ந் தேதி பெங்களூரூ எலகங்கா விமானப்படை தளத்தில் தொடங்கியது. இதனை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் வானில் சாகசங்களை நிகழ்த்தி வருகின்றன. இந்த நிலையில், இன்று கண்காட்சியின் 4-வது நாள் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. 



அப்போது, கார் பார்க்கிங் பகுதியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அங்கு காய்ந்த புற்கள் பரவி இருந்ததால், தீ அப்படியே அங்கு நின்றிருந்த கார் டயர்களுக்கு பரவியது. இதில், 100-க்கும் மேற்பட்ட கார்கள் தீப்பிடித்து எரிந்து நாசமாகின. இந்த தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...