நீலகிரி : பந்திப்பூர் புலிகள் வனக் காப்பகத்திற்கு உட்பட்ட பந்திப்பூர் - தெப்பக்காடு சாலையில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதனை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி : பந்திப்பூர் புலிகள் வனக் காப்பகத்திற்கு உட்பட்ட பந்திப்பூர் - தெப்பக்காடு சாலையில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதனை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடகாவின் எல்லைப்பகுதியில் உள்ள பந்திப்பூர் புலிகள் வனக் காப்பகத்தில் இருந்து நீலகிரி மாவட்ட எல்லையான முதுமலை தெப்பக்காடு செல்லும் சாலை வழியில் இன்று அதிகாலை காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர், வனக் காப்பகத்தின் முக்கிய பகுதிகளில் பரவியுள்ள தீயினை அணைக்க போராடி வருகின்றனர். மேலும், தமிழகம் - கர்நாடகாவை இணைக்கும் முதுமலை - பந்திப்பூர் புலிகள் வனக் காப்பகம் இடையிலான போக்குவரத்து தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது.