கோவை : பாலசுந்தரம் சாலையில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர்கள் விடுதியை முறையாக பராமரிக்காத விடுதிக் காப்பாளரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து கோவை மாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பாலசுந்தரம் சாலையில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் டாக்டர் அம்பேத்கர் ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதி செயல்பட்டு வருகின்றது. இவ்விடுதியில் 174 கல்லூரி மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இவ்விடுதியின் பராமரிப்பு பணிக்கென ஒரு விடுதிக்காப்பாளர், 3 சமையலர், ஒரு உதவி பணியாளர், ஒரு துப்புரவுப் பணியாளர் என மொத்தம் 6 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், இவ்விடுதியின் சமையல் அறை, மாணவர்கள் அறை, கழிப்பறை, மற்றும் விடுதி வளாகம் என ஒவ்வொரு பகுதிகளிலும் மாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி திடீரென இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். இவ்விடுதி வளாகத்தினை முறையாக பராமரிக்காமல் இருந்த காரணத்திற்காக, தனது பணியினை சரிவர மேற்கொள்ளாத விடுதி காப்பாளர் ஆர்.ஜெகநாதனை தற்காலிக பணியிடைநீக்கம் செய்ய ஆட்சியர் கு. இராசாமணி உத்தரவிட்டார்.
மேலும், விடுதியினை முறையாக இருதினங்களுக்குள் சீர்செய்யும்படியும், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.