கோவை : கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் வரும் இன்று மற்றும் நாளை நடைபெறவுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று மற்றும் நாளை நடைபெறவுள்ள இந்த சிறப்பு முகாம்களில், வாக்காளர் பட்டியலில் புதியதாகப் பெயர் சேர்க்க, பெயர் நீக்க, முகவரி திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய, புகைப்படம் மாற்ற என அனைத்து திருத்தங்களும் செய்து கொள்ளலாம்.
ஆகவே, பொதுமக்கள் அவரவர் வசிப்பிடத்தின் அருகிலுள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு சென்று வாக்குச்சாவடி மைய அலுவலரிடமிருந்து திருத்தம் செய்வதற்கான படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த முகாம், அந்தந்த பகுதி வாக்குச்சாவடியில் காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெறும்.