கோவை : ஈசா அறக்கட்டளை சார்பில், காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில், கடந்த 14ம் தேதி அன்று தற்கொலைப் படையினரின் தாக்குதலினால், 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் பலரிடையே, வருத்தத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த வீரர்களுக்கு பல்வேறு அமைப்புகள் கண்ணீர் அஞ்சலியும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவியும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஈஷா அறக்கட்டளை சார்பில், உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில், ரூ.50 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே, இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்களின் நலனுக்காக ஈஷா அறக்கட்டளை தொடர்ந்து செயலாற்றி வருகிறது. அவர்களுக்கு, சத்குருவால் பிரத்தியகமாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு யோகா பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சத்குரு கூறுகையில், "நம்முடைய அனைத்து செயல்கள் மற்றும் சாதனைகளுக்கு, தைரியமிக்க நம் ராணுவ வீரர்களின் தியாகம் மற்றும் சேவையே அடித்தளமாக உள்ளது. அவர்களுக்கு ஆதரவு அளிப்பது நம் பொறுப்பு" என்றார்.