திருப்பூர் ரயில் நிலையத்தில் சரக்குகள் பதிவு அலுவலகம் திறப்பு : திருப்பூர் எம்.பி.,க்கு குவியும் பாராட்டு

திருப்பூர் : திருப்பூர் ரயில் நிலையத்தில் சரக்குகள் பதிவு அலுவலகம் இன்று திறக்கப்பட்ட நிலையில், இதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொண்ட திருப்பூர் எம்.பி., சத்தியபாமாவிற்கு பின்னலாடை உற்பத்தியாளர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

திருப்பூர் : திருப்பூர் ரயில் நிலையத்தில் சரக்குகள் பதிவு அலுவலகம் இன்று திறக்கப்பட்ட நிலையில், இதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொண்ட திருப்பூர் எம்.பி., சத்தியபாமாவிற்கு பின்னலாடை உற்பத்தியாளர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

திருப்பூர் எம்.பி., சத்தியபாமாவின் தொடர் முயற்சியால் திருப்பூர் ரயில் நிலையத்தில் பின்னலாடை உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில், 3,000 சதுர அடியில் ரூ. 24 லட்சம் மதிப்பீட்டில் சரக்கு அலுவலகம் அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்டது. இதற்கான பணிகள் நிறைவடைந்த நிலையில், திருப்பூர் எம்.பி., சத்தியபாமா சரக்கு அலுவலகத்தை இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சு. குணசேகரன் மற்றும் ரயில்வே அதிகாரிகள், அலுவலர்கள், முன்னாள் மண்டல தலைவர் அண்ணன் ஜே.ஆர். ஜான் உள்பட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

இதன் மூலம், அனைத்து ரயில்களும் திருப்பூர் ரயில் நிலையத்தில் நின்று சரக்குகளை ஏற்றி செல்லும். இதன்மூலம், பல ஆண்டுகளாக சரக்குகளை அனுப்புவதில் பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு இருந்த சிக்கல் முடிவுக்கு வந்தது.



இது குறித்து திருப்பூர் எம்.பி., சத்தியபாமா கூறியது :- பின்னலாடை தொழில் நகரமான திருப்பூரிலிருந்து வெளி மாநிலங்களுக்கு தினந்தோறும் பல்லாயிரம் கிலோ மதிப்பிலான பின்னலாடைகள் அனுப்பப்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் பல ரயில்கள் திருப்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லாததால், பார்சல் சேவைகளை திருப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், திருப்பூரிலிருந்து நமது நாட்டின் பல பகுதிகளுக்கும் பனியன் மற்றும் அதுசார்ந்த உற்பத்தி பொருட்களை ரயிலில் அனுப்பி வந்த உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டனர். பார்சலுக்கு அதிக செலவு செய்து தனியார் போக்குவரத்தில் அனுப்பியதால் சரக்குகளுக்கான விலை நிர்ணயிப்பதிலும், அவற்றை விற்பதிலும் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து, பின்னலாடை உற்பத்தியாளர்கள் தன்னிடம் கோரிக்கையை அளித்தனர். பின்னர், இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் உள்பட இது சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளையும் சந்தித்து பேசினேன். இதன் விளையாக அனைத்து ரயில்களும் திருப்பூரில் நின்று செல்லும் வகையில் ஏற்பாடு செய்தது. அதற்காக தற்போது சரக்கு முன்பதிவு அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பின்னலாடை உற்பத்தியாளர்கள் நாடு முழுவதும் சரக்குகளை எளிதாக அனுப்ப முடியும்.

மேலும், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனது தொடர் முயற்சியால் கே.எஸ்.ஆர். பெங்களூரு ரயில் திருப்பூர், ஈரோடு வழியாய் புதிய ” உதய் விரைவு ரயில்” திருப்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல அனுமதி செய்து தரப்பட்டுள்ளது. திருப்பூர் ரயில் நிலையத்தில் ரூ. 55 லட்சம் மதிப்பீட்டில் மின் தூக்கி சேவை செய்து தரப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர் ரயில் நிலையத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நுழைவு வாயில் மற்றும் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் ஏ.சி. வசதியுடன் கூடிய காத்திருப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது.

சென்னிமலை (விஜயமங்களம் - வாய்ப்பாடி கிராமத்தில் 40 ஆண்டுகள் கோரிக்கையான) ரயில் நிலையம் ரூ .2 கோடி மதிப்பில் ரயில்வே தண்டவாளத்தின் அடியில் கான்கிரீட் மூலம் சுமார் 23 மீட்டர் நீளத்திற்கு நுழைவு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னிமலை (விஜயமங்களம் - ரயில் நிலையத்தில் ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நிலையம் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. பெருந்துறை - ஊத்துக்குளியில் ரயில்வே முன்பதிவு மையம் (PRS) அமைத்து தரப்பட்டுள்ளது,

ஊத்துக்ககுளி ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்கள் (சரக்கு மற்றும் ஊரக) மற்றும் ஊரக) நின்று செல்ல ஏதுவாக நடைமேடை இரண்டையும் பெரிதாக்க முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக, நடைமேடை 280 மீட்டராக உயர்த்தப்பட்டு, 24 ரயில் பெட்டிகளை உள்ளடக்கும் வகையில் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீண்டகால கோரிக்கைகளான, ஊத்துக்குளி ரயில் நிலையத்தில் PGTN-TPJ ரயில் வண்டி (எண் 56712) ஊத்துக்குளி ரயில் நிலையத்தில் ஒரு மணித்துளி நின்று செல்ல அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. 

கோபிசெட்டிபாளையத்திற்கு ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு மையத்தை (PRS) கோபி தலைமை தபால் அஞ்சலகத்தில் அமைத்து தரப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே, திருப்பூர் எம்.பி. சத்தியபாமாவிற்கு பின்னலாடை உற்பத்தியாளர்கள் தங்களது மகிழ்ச்சிகளையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...