நீலகிரியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நாளை தொடக்கம்

நீலகிரி : வாக்காளர் பட்டியலில் விடுபட்ட பெயரை சேர்ப்பதற்கு சிறப்பு முகாம் நீலகிரி மாவட்டத்தில் நாளை முதல் 2 நாட்கள் நடக்கிறது.

நீலகிரி : வாக்காளர் பட்டியலில் விடுபட்ட பெயரை சேர்ப்பதற்கு சிறப்பு முகாம் நீலகிரி மாவட்டத்தில் நாளை முதல் 2 நாட்கள் நடக்கிறது. 

இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது :- இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் ‘எந்த ஒரு வாக்காளரும் விடுபடக் கூடாது’ என்ற கருத்தை மையமாக கொண்டு, சிறப்பு சுருக்க முறை திருத்த வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு சிறப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக அனைத்து வாக்குச்சாவடி மையங்களும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்து வைக்கவும், அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மேற்கண்ட நாட்களில் தவறாமல் இருக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனவே, அந்தந்தப் பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் உள்ள வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு, தங்களது பெயர் விடுபட்டு இருந்தால், உடனடியாக படிவம் எண் 6-ஐ பெற்று பூர்த்தி செய்து தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ளலாம். இந்த சிறப்பு முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே,நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு அறையில் வாக்காளர் உதவி மையம் செயல்பட்டு வருகிறது. அந்த மையத்தில் 2 பேர் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். கட்டணமில்லா தொலைபேசி எண் 1950 மூலம் வாக்காளர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ளலாம். வாக்காளர் பெயர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறதா என்பதை சரிபார்க்க www.nvsp.in என்ற இணையதள முகவரி மற்றும் வாக்காளர் உதவி (வோட்டர் ஹெல்ப்லைன்) என்ற ஆண்ட்ராய்டு செயலி மூலம் தெரிந்துகொள்ளலாம்.

18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். பெயரை சரிபார்க்க மற்றும் பதிவு செய்ய எளிதானது. இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு வாக்காளர் உதவி மையத்தை அணுகலாம்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...