கூடலூர் அருகே காட்டுத் தீ : விலையுயர்ந்த மரங்கள் மற்றும் வன உயிர்கள் பலி

நீலகிரி : கூடலுார் நாடுகாணி அருகே ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தில் விலையுயர்ந்த மரங்கள் எரிந்து சேதமடைந்த நிலையில், பல்வேறு சிறு உயிரினங்களும் பலியாகின.

நீலகிரி : கூடலுார் நாடுகாணி அருகே ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தில் விலையுயர்ந்த மரங்கள் எரிந்து சேதமடைந்த நிலையில், பல்வேறு சிறு உயிரினங்களும் பலியாகின.

நாடுகாணி அருகேயுள்ள 'கோல்ட்மைன்ஸ்' வனப்பகுதியில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. தொடர்ந்து, அந்த தீ பொன்னுார், பொன்வயல் வனப்பகுதிகளுக்கும் பரவியது. இது குறித்து தகவலறிந்து வந்த வனச்சரகர் சரவணன் தலைமையிலான வன ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள், தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். வெயிலின் தாக்கம் மற்றும் காற்றின் வேகத்தால், தீயைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. 

இந்த தீவிபத்தில் பல ஏக்கர் பரப்பிலான புல்வெளி எரிந்து சாம்பலானது. இந்த காட்டுத் தீ விபத்தின் போது, பறவை ஒன்று தனது குஞ்சுகளைக் காக்க போராடிய காட்சி வன ஊழியர்களை சோகத்தில் ஆழ்த்தியது. மேலும், பல சிறு வன உயிரினங்கள் மற்றும் விலையுயர்ந்த மரங்களும் எரிந்து சாம்பலாகின. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...